இந்தியாசெய்திகள்

உத்தர பிரதேச மாவட்டங்களுக்கு ஏற்றபடி அரசு கட்டிடங்களுக்கு ஒரே வர்ணம் பூச முதல்வர் அனுமதி: முக்கிய சாலைகளில் உள்ள தனியார் கட்டிடங்களிலும் அமல்

63views

உத்தரபிரதேசத்தின் மாவட்டங்களுக்கு ஏற்றபடி அரசு கட்டிடங்களுக்கு ஒரே வர்ணம் பூசும் திட்டத்திற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதித்துள்ளார்.

கடந்த 1876-ல் ராஜஸ்தானின் ஜெய்ப்பூருக்கு வந்த விக்டோரியா அரசியை வரவேற்க அதன் கட்டிடங்களுக்கு ரோஸ் வர்ணம் பூசப்பட்டது. அப்போது முதல் சர்வதேச அளவில் ஜெய்ப்பூர் ‘பிங்க் சிட்டி (ரோஸ் நகரம்)’ என்ற பெயரில் புகழடைந்தது.

இந்தவகையில், பாஜக ஆளும் உபியிலும் புதிய மாற்றம் கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான அனுமதியை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அளித்திருப்பதாகத் தெரிகிறது. இதற்கான உத்தரவை அடுத்த சில தினங்களில் உபியின் நகர்ப்

புற வளர்ச்சித் துறையால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தின்படி, உபியில் உள்ள 75 மாவட்டங்களிலும் அதன் முக்கியத்துவத்திற்கு ஏற்ற வகையில் ஒரே வர்ணம் தேர்வு செய்யப்

படும். இந்த வர்ணம் அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு கட்டிடங்களிலும் பூசப்படும். அதேசமயம், இந்த வர்ணம் முக்கிய சாலைகளில் உள்ள தனியார் கட்டிடங்களின் முன்புறங்களிலும் பூசுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் உபி மாநில அரசு உயர் அதிகாரிகள் வட்டாரங்கள்போது, ‘இதற்காக உபி நகர்ப்புற வளர்ச்சி சட்டம் 1973-ல் பல்வேறு முக்கியத் திருத்தம் செய்யப்பட உள்ளது.

இதில் ஒன்றான ஒரே வர்ணம் பூசுவது அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக முடிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாட்களுக்குள் செய்ய முடியாத தனியார் கட்டிடங்களில் அரசே அதை செய்து முடிக்கும். இதற்

கானத் தொகை அக்கட்டிடத்தின் உரிமையாளரிடம் பிறகு வசூலிக்கப்பட உள்ளது’ எனத் தெரிவித்தன.

இந்த திட்டத்தில் காசி எனும் வாரணாசி, மதுரா, அலகாபாத் மற்றும் அயோத்யா உள்ளிட்ட தெய்வீக நகரங்களுக்கு காவி நிறம் பூசப்பட உள்ளது. வெள்ளை நிறப் பளிங்கு கற்களால் ஆன தாஜ்மகால் கொண்ட ஆக்ரா நகரத்திற்கு வெள்ளை வர்ணமும் பூசத் திட்டமிடப்படுகிறது. தலைநகரான லக்னோவிற்கு மஞ்சள் அல்லது ரோஸ் வர்ணம் பூசும் வாய்ப்புகள் உள்ளன.

புதிய நிற மாற்றங்கள் உபிக்கு புதிதல்ல, இந்த நடவடிக்கையை கடந்த 15 வருடங்களாக உபியில் ஆட்சிக்கு வரும் கட்சியினர் யாராக இருப்பினும் செய்து வருகின்றனர். இதை முதன் முதலில் துவக்கிய மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கொடியின் வர்ணம் நீலம் ஆகும். இதனால், அவரது ஆட்சியில் புதிதாக அரசு அலுவலகங்களில் தொங்கவிடப்பட்டிருந்த தலைவர் கள் படங்கள் நீலவர்ணப் பின்னணியில் அமைந்திருந்தன. புதிதாக வாங்கப்படும் அரசு நாற்காலிகளுக்கு நீலவர்ணம் பூசப்பட்டது. இவரை அடுத்து ஆட்சிக்கு வந்த சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ்சிங், நீலத்தை பச்சை என்று மாற்றினார். அவரது கட்சி கொடியின் வர்ணமான பச்சை, அரசு பேருந்துகளில் இடம் பெற்றது.

துவக்கப் பள்ளிக் குழந்தை களுக்கு அளித்த இலவச பாடப் புத்தக பைகளின் வர்ணம் பச்சையானது. இந்த பச்சை வர்ணம் பாஜக ஆட்சியில் முதல்வர் ஆதித்யநாத் வருகையால் காவிநிறமானது. உ.பி.யில் அமர்த்தப்பட்ட யோகி முதலாவது சாது முதல்வர்.

எந்நேரமும் இவர், காவி நிற உடைகளையே அணிபவர். இது பாஜக கொடியின் நிறமாகவும் அமைந்துள்ளதால் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!