உத்தராகண்ட்: ஊரடங்கை மீறிய பாஜக எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் விதித்த உதவி ஆய்வாளர் இடமாற்றம்
உத்தராகண்டில் ஊரடங்கை மீறிய பாஜக எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
உத்தராகண்ட் மாநிலத்தில் ரூர்கி தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரதீப் பத்ரா. இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று, தனது குடும்பத்தினருடன் ஊரடங்கு விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் வெளியே சுற்றிக்கொண்டிருந்தார். அப்போது அவரை மறித்த காவல்துறையினர், அவர் எம்.எல்.ஏ. என்பதை அறியாமல் அபராதம் விதித்தனர்.
இதில் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. அபராதத் தொகையை எடுத்து போலீசாரின் முகத்தில் வீசி எறிந்தார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது.
இந்த நிலையில் எம்.எல்.ஏ.வுக்கு அபராதம் விதித்த காவல் உதவி ஆய்வாளர் நீரக் காதெய்ட் நேற்று முன்தினம் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். தன் கடமையை சரியாகச் செய்ததற்காக அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.