இந்தியாசெய்திகள்

ஸ்டாலின் சந்திப்பு குறித்து ராகுல் ட்வீட்..!

70views

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் முதன்முறையாக டில்லி சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின், நேற்று மாலை 5 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, தடுப்பூசி தட்டுப்பாடு, நீட்தேர்வு, ஹைட்ரோகார்பன், ஜிஎஸ்டி நிலுவைத் தொகை, எழுவர் விடுதலை உள்ளிட்ட பல விவகாரங்கள் பற்றி மோடியுடன் பேசியதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

அரை மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையின்போது, அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார். சந்திப்புக்குப் பிறகு தமிழ்நாடு இல்லம் திரும்பிய முதல்வர் ஸ்டாலின் இரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.

இன்று காலை, டில்லியில் உள்ள இல்லத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசினார் ஸ்டாலின். இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.கஸ்டாலினை தானும், தன் தாய் சோனியா காந்தியும் சந்தித்துப் பேசியதாக ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வளமான, வலிமையான மாநிலமாக தமிழகத்தை மாற்ற திமுகவுடன் தொடர்ந்து காங்கிரஸ் செயல்படும் என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!