செய்திகள்விளையாட்டு

சுப்மன் கில் இந்த தவறை மட்டும் செய்துவிடக்கூடாது ; இந்த தவறை அவர் செய்தால் நிச்சயமாக அவுட்டாகி விடுவார் – சஞ்சய் மஞ்ச்ரேக்கர் !!!

138views

21 வயது இளம் வீரரான கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பாக விளையாடி உலக அளவில் அனைத்து ரசிகர்களிடமும் நற்பெயரை பெற்றுக்கொண்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவர் அடித்த 91 ரன்கள் இந்திய அணியின் வெற்றியை உறுதிப்படுத்தியது. இளம் வயதில் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வைத்து, வெற்றியை தீர்மானிக்கும் போட்டியில் திக்குமுக்காடச் செய்தார். அதன் காரணமாக அவருக்கு இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் அடுத்தடுத்து வாய்ப்புகளை வழங்கி கொண்டு வருகிறது.

அவர் தற்பொழுது நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாட தயாராக இருக்கிறார். இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சுப்மன் கில்லுக்கு ஒரு அறிவுரை கூறியிருக்கிறார்.

கில் அனைத்து விதத்திலும் மிக சிறப்பாக விளையாடி வருகிறார் ஆனால் அவரிடம் ஒரு வீக்னெஸ் இருக்கிறது. வந்து சற்று அவுட் சைடு பக்கம் வரும் நிலையில் சில தேவையில்லாத ஷாட்டுகளை அவர் விளையாடுகிறார். இங்கிலாந்து மைதானங்களில் அவருக்கு அவ்வளவாக அனுபவம் கிடையாது.

இங்கிலாந்து போன்ற மைதானங்களில் வந்து எப்பொழுதும் ஸ்விங் ஆகி வரும். நியூசிலாந்து அணிகள் போல்ட் மற்றும் சவுதி வீசக்கூடிய பந்துகள் அவுட் சைடு பக்கம் நேராக வருவது போல் இருக்கும் ஆனால் அது குத்தி ஸ்விங் செய்து பேட்ஸ்மேனை ஆச்சரியப்படுத்தும்.

எனவே கில் இறுதிப் போட்டியில் அவுட் சைடு பக்கம் வரும் பந்துகளை நிதானமாக விளையாட வேண்டும். இதற்குரிய பயிற்சியை அவர் முறையாக எடுத்துக் கொண்டு இறுதிப் போட்டியில் களமிறங்க வேண்டும் என்று அறிவுரை கூறியுள்ளார். நிச்சயமாக அவருக்கு நிறைய திறமை இருக்கிறது ஆனால் ஒரு சில விஷயங்களில் அவர் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சஞ்சே மன்ஜரேகர் கூறியிருக்கிறார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இன்னும் மூன்று மாதங்கள் உள்ள நிலையில் இந்திய அணி தற்போது பயிற்சி ஆட்டங்களில் விளையாடி வருகிறது. இப்போது வந்திருக்கும் தகவல் படி ஓபனிங் வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் கில் களம் இறங்குவார்கள் என்று நம்பப்படுகிறது. அதேபோல ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய இருவரும் இந்த போட்டியில் விளையாட அதிக வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!