வளரும் நாடுகளுக்கு 2022ஆம் ஆண்டுக்குள் 100 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்கி உதவ ஜி7 மாநாட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தொழில் வளா்ச்சியில் முன்னிலை வகிக்கும் நாடுகள் இடம் பெற்றுள்ள ஜி-7 கூட்டமைப்பின் 47ஆவது மாநாடு பிரிட்டனின் கார்ன்வால் பகுதியிலுள்ள செயின்ட் ஐவ்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது.
இந்த மாநாட்டில் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், ஜொமனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் அமைப்பின் தலைவா்கள் கலந்து கொண்டனா்.
எல்லா தரப்பினருக்கும் பாரபட்சமின்றி கொரோனா தடுப்பூசிகள் சென்று சோவதற்காக ஐ . நா . செயல்படுத்தி வரும் கோவாக்ஸ் திட்டத்தின் மூலம் இந்த உதவியை ஜி -7 உறுப்பு நாடுகள் செய்யவுள்ளன .
இந்த முடிவின் ஒரு பகுதியாக , பிரிட்டனும் 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை உலகின் மிக ஏழ்மையான நாடுகளுக்கு வழங்கி உதவும் என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
ஜி-7 மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த முடிவு, கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மிக முக்கியமான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. ஐ.நா.வின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் ஏழை நாடுகளில் விநியோகிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகளில் 96% ஆக்ஸ்ஃபோர்டு -அஸ்ட்ராஸெனகா நிறுவனத்தால் உருவாக்கப்பட்டவை.
இந்த மாநாட்டில் கொரோனா நோயிலிருந்து உலகை விடுபடச் செய்வதற்கான திட்டங்கள் மட்டுமன்றி, கல்வியை மேம்படுத்துவதற்கான புதிய சா்வதேச கூட்டணியும் உருவாக்கப்பட்டுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் உலகில் கூடுதலாக 4 கோடி பெண்கள் ஆரம்ப நிலை பள்ளியில் சேர்வதற்கும் கூடுதலாக 2 கோடி போ ஆரம்ப நிலை பள்ளிக் கல்விக்குப் பிறகு தொடா்ந்து படிக்கவும் நிதியுதவி அளிக்க ஜி-7 நாடுகளின் தலைவா்கள் இந்த மாநாட்டில் உறுதியளித்துள்ளனா்.
மேலும் குறிப்பாக இந்த ஆண்டின் இறுதியில் சா்வதேச பருவநிலை மாநாட்டை பிரிட்டன் நடத்தவிருக்கிறது. அந்த மாநாட்டில் பருவநிலை மாற்றத்திலிருந்து உலகைப் பாதுகாப்பது குறித்து விவாதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பருவநிலை மாற்றத்துக்குக் காரணமான வாயு மாசுக்களில் 20 சதவீதத்தை ஜி-7 உறுப்பு நாடுகள்தான் காற்றில் கலக்கின்றன. இந்தச் சூழலில், இதுதொடா்பான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ள தற்போது நடைபெற்றுள்ள ஜி-7 மாநாட்டில் உறுப்பு நாடுகள் உறுதிபூண்டுள்ளன.