இந்தியாசெய்திகள்

புனே அருகே சோகம் ரசாயன ஆலையில் தீ 18 பேர் கருகி பலி

77views

ரசாயன தொழில்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 15 பெண்கள் உட்பட 18 பேர் கருகி பலியாகினர். மகாராஷ்டிரா மாநிலம், புனே மாவட்டம், முல்ஷி தாலுகா, பிரான்குட் பகுதியில் உள்ள உரவாடா கிராமத்தில் மகாராஷ்டிரா தொழில் மேம்பாட்டு நிறுவனத்துக்கு (எம்.ஐ.டி.சி.) சொந்தமான தொழிற்பேட்டை உள்ளது.

இங்கு எஸ்.வி.எஸ். அக்குவா டெக்னாலஜிஸ் என்ற ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் நேற்று மாலை சுமார் 4 மணியளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, தீயை போராடி அணைத்தனர். எனினும் 18 பேர் உடல் கருகி பலியாகிவிட்டனர். இதில் 15 பேர் பெண்கள் எனவும் தீயணைப்பு துறையினர் தரப்பில் கூறப்பட்டது.

விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிபத்து குறித்து தகவலறிந்த பிரதமர் நரேந்திர மோடி, உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 வழங்குவதாக அறிவித்தார். இதுபோல், மகாராஷ்டிரா துணை முதல்வர் அஜித் பவார், இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!