அறிவிப்பு

மனிதம் உயிர்க்கிறது

206views
மே மாதம் மூன்றாம் தேதி செங்கல்பட்டில் உள்ள முத்து என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர் தங்கையின் கணவர் சவுதி அரேபியாவில் ஒரு அரபி வீட்டில் ஓட்டுனராக பணிபுரிந்து வந்ததாகவும் அவர் மருத்துவமனையில் இறந்து விட்டதாகவும் கூறினார்.
பிறகு அங்கிருந்து அவர் உடலை இந்தியா கொண்டு வருவதற்கு உதவிடுமாறு என்னைக் கேட்டுக்கொண்டார் நான் சென்னையில் உள்ள அஞ்சுகம், நாகா சார் இவர்களை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தேன் அவர்கள் அபுதாபியில் உள்ள நண்பன் திரு ஃபிர்தௌஸ் பாஷா அவர்களிடம் விவரத்தை கூறினார்கள்.
திரு. ஃபிர்தௌஸ் பாஷா அவர்கள் செந்தில் அவர்களின் பாஸ்போர்ட் நகல் அல்லது அரபியின் அட்ரஸ் கேட்டார் ஆனால் செந்தில் தங்கையின் இடத்தில் அரபியின் போன் நம்பரை தவிர வேறு எதுவும் இல்லை பிறகு இந்த போன் நம்பரை பெற்று சவுதியில் இருக்கும் அரபி ஓனர் இடம் நான் பேசினேன்.

 அவர் செந்தில் சர்க்கரை நோய் காரணமாக மருத்துவமனையில் சேர்த்தோம்.  அங்கு இறந்துவிட்டதாகவும்  அவருக்கு பணம் தர  இயலாது அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல எந்த வகையிலும் உதவ முடியாது என்றுகூறிவிட்டார்.  பின் செந்தில்குமார் பாஸ்போர்ட் காப்பி எனக்கு வாட்ஸ்அப் செய்யும்படி கேட்டுக் கொண்டேன்.  அரபி ஓனர் பாஸ்போர்ட் காப்பி அனுப்பி செந்தில்குமார் இருக்கும் ஹாஸ்பிடல் பெயரையும்
தெரிவித்திருந்தார்.  எனக்கு கிடைத்த விவரங்களை அபுதாபியில் இருக்கும் திரு ஃபிர்தௌஸ் பாஷா அவர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பி வைத்தேன்
 அபுதாபியில் இருக்கும் திரு பிர்தௌஸ்  பாஷா  சவுதி அரேபியா ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் தொடர்பு கொண்டு பெறும் முயற்சி எடுத்து செந்தில்குமார் உடலை இந்தியா கொண்டுவர பணஉதவி முழுவதையும் தூதரகம் ஏற்க  செய்தார்.

 

சவுதி அரேபியாவில் இருக்கும் நண்பர் நவ்ஷத் மற்றும் நண்பர் ரஃபிக் இருவரும் பெரிதும் உதவினர்.
அபுதாபியில் உள்ள திரு பிர்தௌஸ்  பாஷா மனிதநேயத்துடன் எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் கடவுள் போல் உதவி செய்தார்.  ஆனால் செந்தில்குமார் வேலைசெய்த அரபிஓனர்  ஈவு இரக்கம் இல்லாமல் பணமும் தராமல் செந்தில்  உடம்பை இந்தியா கொண்டு வர எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.   மிகவும் வருத்தமான செயல் செந்தில்குமார் உடலை சவுதியிலிருந்து இந்தியா கொண்டுவர திரு ஃபிர்தௌஸ் பாஷா வலியுறுதலினால் சவுதியில் உள்ள இந்திய தூதரகம் சுமார் 5500 AED இந்திய மதிப்பு ஒரு லட்சத்தி பத்தாயிரம் ரூபாய் செலவு செய்து செந்தில் உடலை         03 06 2021 இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார்கள்
சவுதி அரேபியாவில் உள்ள இந்தியா தூதரகத்தின் உதவியில் செந்தில்குமார் உடல் 03 06 21 காலை சென்னை விமானநிலையம் வந்தது.   கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஆய்விற்கு பின்னர் 12 00 மணி அளவில் உறவினர்கள் இடம் ஒப்பந்ததார்கள்.
நேற்று மாலை அவரின் சொந்த ஊரான விச்சூர் கொண்டு சென்று உறவினர் பார்வைக்கு பின் நல்லடக்கம் செய்யப் பட்டது.  இதற்கு பெரிதும் உதவிய அஞ்சுகம், நாகா சார் , அபுதாபியில் நண்பர் ஃபிர்தௌஸ் பாஷா சவுதியில் நண்பர் ரபீக் நண்பர் நவ்ஷாத் அனைவருக்கும் கோடான கோடி நன்றிகள்.
என்றும் நட்புடன்,
  • T M.பழநி,  செங்கல்பட்டு.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!