புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக, அமல்படுத்தப்பட்ட தளர்வுடன் கூடிய ஊரடங்கு நாளை நிறைவடைகிறது. இந்த ஊரடங்கு காலத்தில், அத்தியாவசிய தேவைகளைத் தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்காக பகல் 12 மணி வரை கடைகள் திறந்துள்ளன.
இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது நடைமுறையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையை பொருத்து ஊரடங்கு நீட்டிப்பு குறித்து மறு ஆய்வு செய்யப்படும் என்று துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து விரிவான அரசாணை வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.