தமிழகம்

தமிழக முதல்வரிடம்’உறவினர் பராமரிப்பு திட்டம்’கோரிக்கை வைக்கிறேன்.கமல்ஹாசன்

69views

கொரோனா பெருந்தொற்றின் கொடூர தாண்டவத்தால் நிறைய குழந்தைகள் பெற்றோரை இழந்து தவிக்கின்றனர். வாடி நிற்கும் பிஞ்சுகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகி இருக்கிறது என்று கவலை தெரிவித்திருக்கிறார் மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசன்.

அவர் இந்த பிரச்சனை குறித்து, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநில அரசுகள் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி மற்றும் நிதிஉதவி வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. புதுடெல்லி அரசும் இலவச கல்வி வழங்குகிறது. ஆந்திர அரசு பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு வங்கி கணக்கு துவக்கி 10 லட்சம் ரூபாய் டெபாசிட் தொகையாக செலுத்தப்படும் என்றும் இந்த டெபாசிட் தொகை மூலமாக கிடைக்கும் வட்டி வருவாய் மூலம் பாதுகாவலர் அந்த குழந்தையை நன்றாக கவனிக்க வேண்டும் என்றும் அறிவித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறார்.

பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளை அவர்களின் உறவினர் அல்லது பெற்றோர்கள் நெருங்கிய நட்பு வட்டத்தினர் பராமரிப்பதே சிறந்தது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏற்கனவே இழப்பில் வாடும் குழந்தைகளை முன்பின் தெரியாதவர்கள் ஆதரவு அளித்தால் குழந்தைகள் மனரீதியாக பாதிக்கப்பட அதிக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள்.

எனவே பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் கீழ் இயங்கும் மாநில துறைகளும் சிறார் நீதி சட்டம் அடிப்படையில் பெற்றோரை இழந்த அவர்களை பராமரிக்க’ உறவினர் பராமரிப்பு திட்டத்தை’ வளர்ப்பு மற்றும் பராமரிப்பு ஏற்பாடுகளில் ஒரு பகுதியாக செயல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

மாவட்ட குழந்தை பாதுகாப்பு பிரிவு சார்பில் இந்த நெருக்கடியான காலத்தில் கொரோனாவல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் பெற்றோர்களின் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்பதை உறுதி செய்யவும் கண்காணிப்புக் குழு ஒன்றை அமைக்க வேண்டும். குழந்தைகளுக்கும் அவர்களை பராமரிக்க வேண்டிய தொகையை வழங்க வேண்டும். ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான சூழலை அமைத்துத் தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!