கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் மரணப் படுக்கையில் இருந்த தாய்க்காக அவரது மகன் செல்போனில் வீடியோ கால் மூலம் பாட்டு பாடிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
இந்த கொரோனா காலத்தில் இறந்தவரின் முகத்தை கூட உறவினர்கள் பார்க்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. வைரஸ் என்று பேராபத்தால் இறுதி சடங்குகளை கூட செய்ய முடியவில்லை. அந்தவகையில் தான் இறக்கும் தருவாயில் இருந்த தனது தாயை செல்போன் வீடியோ கால் மூலம் பார்த்துள்ளார் அவரது மகன்.
தெற்கு டெல்லியைச் சேர்ந்த சங்கமித்ரா சாட்டர்ஜி (70) என்பவர் கொரோனா பாதிப்பு காரணமாக ஒரு வாரத்துக்கு முன்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்த போதிலும் , அவரது ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டே வந்தது .
ஒருகட்டத்தில் , அவர் இறந்துவிடுவார் என்பதை அறிந்த மருத்துவர்கள் , யாருடனாவது பேச விருப்பமா எனக் கேட்டுள்ளனர் . அதற்கு , தனது மகன் சோஹம் சாட்டர்ஜியுடன் பேச விரும்புவதாக அவர் கூறினார் .
இதையடுத்து , சோஹம் சாட்டர்ஜியை வீடியோ அழைப்பு மூலமாக தொடர்பு கொண்ட மருத்துவர்கள் , அவரது தாயாரின் நிலையை எடுத்துக்கூறி , மகிழ்ச்சியாக ஏதேனும் பேசுங்கள் எனக் கூறினர் . பின்னர் தாயும் , மகனும் சில நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர் .
செல்போனில் மகனை பார்த்த மகிழ்ச்சியில் பேசிய சங்கமித்ரா , தனக்காக ஒரு பாடல் பாடுமாறு கேட்டுள்ளார் . இதனைத் தொடர்ந்து , அவரது மகனும் பழைய இந்தி பாடல் ஒன்றை பாடினார் . அதனை உணர்ச்சி ததும்ப கேட்டுக் கொண்டிருந்த சங்கமித்ரா , சிறிது நேரத்தில் உயிரிழந்தார் .
இந்த வீடியோ காட்சியை அந்த மருத்துவமனையில் இருந்த மருத்துவர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . இதற்கு லட்சக்கணக்கானோர் உருக்கமாக பதிவிட்டு வருகின்றனர் .
93views
You Might Also Like
சந்திப்பு
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை மரியாதை நிமித்தமாக அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழக மாநில இளைஞரணி செயலாளர் வைர தேவர் சந்தித்தார்....
வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை திரும்ப பெறுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமிய மக்களின் மத உணர்வுகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்கிற...
55 வது கல்லூரி நாள்
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில், 55 வது கல்லூரி நாள் 09.04.2025 அன்று நடைபெற்றது. கல்லூரி துணைமுதல்வர் முஸ்தாக் அகமது கான் வரவேற்றார்....
தமிழ்நாடு அரசு அனைத்துதுறை பணியாளர் சங்க மாவட்ட செயற்குழு கூட்டம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு அரசு அனைத்து துறை பணியாளர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் ரமேஷ் தலைமையில் வேலூர் அடுத்த சத்துவாச்சாரி வள்ளலாரில் உள்ள சங்க அலுவலகத்தில்...
வேலூர் காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரி மற்றும் காவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் மதிவாணன், பணமுடிப்பு மற்றும் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டினார். செய்தியாளர்: வேலூர்...