உலகம்

மூன்றாம் உலக போரை உருவாகிய சீனா -அதிர்ச்சியில் உலக நாடுகள்!

69views

சீனா மூன்றாம் உலகப்போரை எதிர்கொள்வதற்கு, சார்ஸ் கொரோனா வைரஸ் போன்ற உயிரி ஆயுதத்தை தயாரிக்க திட்டமிட்டதாக அமெரிக்காவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், இப்போது உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.

இந்த வைரஸ், சீனாவின் ஆய்வகத்தில் இருந்து தான் பரவியதாக அமெரிக்கா போன்ற நாடுகள் குற்றம் சாட்டினாலும், சீனா தொடர்ந்து மறுத்து வந்தது. உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கூட கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என அறிவித்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதற்கு 5 ஆண்டுக்கு முன்பே இதுபோன்ற ஒரு உயிரி ஆயுதத்தை தயாரிக்க சீன இராணுவம் திட்டமிட்டதாக அமெரிக்க வெளியுறவு துறையின் புலனாய்வு பிரிவுக்கு சில ரகசிய ஆவணங்கள் கிடைத்திருப்பதாக பிரபல ஆங்கில ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், கடந்த 2015-ஆம் ஆண்டில் சீன இராணுவத்தின் விஞ்ஞானிகள் மற்றும் பொது சுகாதார நிபுணர்கள் இணைந்து, சார்ஸ் கொரோனா என்ற வைரசை உருவாக்கும் திட்டத்தை தயாரித்தனர்.

இந்த வைரசை, தேவைப்படும்போது, உயிரி ஆயுதமாக பயன்படுத்தவும் திட்டமிட்டனர். மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால், தன்னை எதிர்க்கும் நாடுகள் மீதும் பயன்படுத்துவதற்கு சீனா இந்த உயிரி ஆயுதத்தை ஏவ திட்டமிட்டிருந்தது.

இதனால், வைரஸ் இயற்கையாக உருவானதாக தோன்றும் அளவுக்கு ஆய்வுகள் இருக்க வேண்டும் எனவும், எதிர்காலத்தில் உலக நாடுகள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கும், குற்றஞ்சாட்டினால் மறுக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என சீன இராணுவம் உத்தரவிட்டுள்ளது.

புதிய யுகத்தின் ஆயுதமாக தொற்று நோய்க்கிருமிகளை ஏவ சீனாவின் ராணுவ விஞ்ஞானிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!