உலகளவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும்நிலையில் இந்தியாவில் தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்குநாள் அதிகரித்து வருவதனால் அரசுமற்றும்தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகள் நிரம்பி வழிகின்றனர். மேலும் நோயாளிகளுக்கு படுக்கைகள் இல்லாத அவலநிலையும் காணப்படுகின்றது.
இந்நிலையில் பல அரச மற்றும் தனியார்கட்டிடங்கள் கொரோனா சிகிச்சை நிலையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் கவிப்பேரரசு வைரமுத்து தனது திருமண மண்டபத்தை கொரோனா சிகிச்சைக்காக கொடுத்து தவமுன் வந்துள்ளார்.
இது குறித்து வைரமுத்து தனது சமுக வலைத்தளபக்கத்தில் திருமணமண்டபங்களை தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றுவதற்கு தமிழகஅரசு முடிவெடுத்திருப்பதனால் முதல் மண்டபமாக எங்கள் பொன்மணிமாளிகை திருமணமண்டபத்தை மருத்துவமனையாக மாற்ற வழங்குகின்றேன் என் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.