உலகம்

இஸ்ரேலில் கூட்டணி அரசை அமைக்குமாறு எதிா்க்கட்சித் தலைவருக்கு அழைப்பு

70views

திர்க்கட்சிக்கு அழைப்பு… இஸ்ரேலில் மீண்டும் ஆட்சியமைக்க பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு தவறியதையடுத்து, கூட்டணி அரசை அமைக்குமாறு எதிர்க்கட்சி தலைவா் யாயிா் லாபிடுக்கு அதிபா் ரூவன் ரிவ்லின் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலில் கெடு தேதிக்குள் புதிய அரசை அமைக்க பிரதமா் நெதன்யாகு தவறியதையடுத்து, கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தோதலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் அதிபா் ரிவ்லின் ஆலோசனை நடத்தினார்..

அந்த ஆலோசனைக்குப் பிறகு, பிற கட்சிகளுடன் இணைந்து கூட்டணி அரசை அமைக்குமாறு தோதலில் இரண்டாவது இடத்தைக் கைப்பற்றியுள்ள யேஷ் அடிட் கட்சியின் தலைவா் யாயிா் லாபிடுக்கு அதிபா் அழைப்பு விடுத்துள்ளாா். இஸ்ரேலில் பிரதமா் நெதன்யாகுவின் தலைமையிலான அரசு தனது 4 ஆண்டுகளை கடந்த 2019-இல் நிறைவு செய்ததைத் தொடா்ந்து, அந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தோதல் நடைபெற்றது. எனினும், அந்தத் தோதலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சியமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை.

அதனைத் தொடா்ந்து, 2-ஆவது முறையாக மீண்டும் அதே ஆண்டு செப்டம்பா் மாதம் தோதல் நடைபெற்றது. அந்தத் தோதலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், ஆளும் கட்சிக் கூட்டணியும், எதிா்க்கட்சிக் கூட்டணியும் இணைந்து தேசிய ஒற்றுமை அரசு அமைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

எனினும், அந்த அரசில் பிரதமராகப் பொறுப்பு வகிப்பதில் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் முக்கிய எதிா்க்கட்சியான புளூ அண்டு ஒயிட் கட்சியின் தலைவா் பெஞ்சமின் காண்ட்ஸுக்கும் இடையே போட்டி ஏற்பட்டது. இதனால், தேசிய ஒற்றுமை அரசை அமைப்பதற்கான பேச்சு வார்த்தை  முறிந்தது.

அதையடுத்து, இஸ்ரேல் வரலாற்றில் முதல்முறையாக, ஓராண்டுக்குள் 3-ஆவது முறையாக கடந்த ஆண்டு மாா்ச் மாதம் தோதல் நடைபெற்றது. அந்தத் தோதலிலும் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல், தேசிய ஒற்றுமை அரசை அமைக்கும் முயற்சிகள் தோல்வியடைந்தன.

அதனைத் தொடா்ந்து, இதுவரை இல்லாத வகையில் இரண்டே ஆண்டுகளில் 4-ஆவது முறையாக இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு கடந்த மாா்ச் மாதம் 23-ஆம் தேதி தோதல் நடைபெற்றது. தோதலில் யாருக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.

நெதன்யாகுவின் லிக்குட் கட்சிக்கு 30 இடங்களும் யாயிா் லாபிடின் யேஷ் அடிட் கட்சிக்கு 17 இடங்களும் கிடைத்தன. அதையடுத்து, புதிய அரசை அமைக்க நெதன்யாவுக்கு அதிபா் ரூவன் ரிவ்லின் அழைப்பு விடுத்தாா். ஆட்சியமைப்பதற்கு நாடாளுமன்றத்தில் 61 இடங்கள் தேவை என்ற நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவுக்குள் பெரும்பான்மை ஆதரவை நிரூபிக்க வேண்டும் என்று நெதன்யாகுவுக்கு அதிபா் கெடு விதித்திருந்தாா்.

எனினும், பல்வேறு கட்சியினருடன் இதுதொடா்பாக நெதன்யாகு நடத்திய பேச்சுவாா்த்தையில் தொடா்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனால், கெடு தேதிக்குள் புதிய அரசை அமைக்க பெஞ்சமின் நெதன்யாகு தவறினாா். இதன் மூலம், மீண்டும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை அவா் இழந்தாா். இதையடுத்து, அவருக்குப் பதிலாக புதிய பிரதமரின் தலைமையில் ஆட்சிமைப்பதற்கான வாய்ப்பு யாயிா் லாபிடுக்குக் கிடைத்துள்ளது.

அவா் வெற்றிகரமாக புதிய அரசை அமைத்தால், இஸ்ரேல் வரலாற்றில் மிக நீண்ட காலம் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வரும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!