விளையாட்டு

IPL 2021 | மாலத்தீவுகளுக்கு பறந்த ஆஸ்திரேலிய வீரர்கள்.. வெளிநாட்டு வீரர்கள் எப்படி சொந்த நாடு திரும்புகின்றனர்?

76views

ந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்ததன் விளைவாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அதில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள், வர்னணையாளர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்க பல்வேறு வழிகளை அணி நிர்வாகங்கள் கையாண்டு வருகின்றன.

ஐபிஎல் தொடரின் 14வது சீசன் கொரோனா பரவலுக்கு மத்தியில் கடந்த ஏப்ரல் 9ம் தேதி தொடங்கியது. லீக் ஆட்டங்கள், பிளே ஆஃப், ஃபைனல் என மொத்தம் 60 ஆட்டங்கள் நடத்த திட்டமிட்டிருந்தது. இதற்கிடையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்தது, தினசரி புதிதாக பாதிக்கப்படுபவர்கள் லட்சக்கணக்கிலும், உயிரிழப்பு ஆயிரங்களிலும் இருந்து இருந்து வருகிறது. கடுமையான பாதுகாப்பு வளையத்தையும் மீறி ஐபிஎல் வீரர்கள், பயிற்சியாளர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் மேற்கொண்டு தொடரை நடத்தாமல் பாதியிலேயே ஐபிஎல் தொடரை காலவரையின்றி ரத்து செய்வதாக பிசிசிஐ அறிவித்தது. மொத்தம் 29 ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இதனிடையே இந்தியாவில் கொரோனா பரவல் உச்சத்தில் இருந்து வருவதால் இந்தியாவுடனான விமான போக்குவரத்தை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ரத்து செய்துள்ளன. இதனால் சொந்த ஊர்களுக்கு வீரர்களை அனுப்பி வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் மட்டும் தனது வெளிநாட்டு வீரர்களை தனி விமானம் மூலம் அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளது. பிற அணிகள் விமான நிறுவனங்களையே நம்பியுள்ளன.

ஆஸ்திரேலியா தற்போது இந்தியாவிற்கு பயணத் தடைவிதித்திருப்பதால், ஆஸ்திரேலிய வீரரகள் முதலில் மாலத்தீவுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். அங்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு பின்னர் அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். அகமதாபாத் மைதானத்தில் தற்போது 4 அணி வீரர்கள் முகாமிட்டுள்ளனர். எனவே அகமதாபாத்திலிருந்து பெரும்பாலான தனி விமானங்கள் வெளிநாடுகளுக்கு இயக்கப்பட உள்ளன. இந்தியாவில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 38 வீரர்கள் ஐபிஎல் தொடரில் கலந்து கொண்டனர்.

இவர்கள் தனி விமானம் மூலம் மாலத்தீவுகளுக்கு புறப்பட இருக்கின்றனர். இந்த தகவலை டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் உறுதிப்படுத்தியுள்ளார்.

மும்பை அணியில் நியூசிலாந்து வீரர்கள் கணிசமாக உள்ளனர். எனவே நியூசிலாந்து, மேற்குஇந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்காவிற்கு தனி விமானங்ளில் வீரர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். நியூசிலாந்தி ட்ரெண்ட் போல்ட், ஆடம் மில்னே, ஜேம்ஸ் நீஷம், ஷேன் பாண்ட் உடன் பிற அணிகளைச் சேர்ந்த நியூசிலாந்து வீரர்களும் இணைய உள்ளனர். பிற அணி வீரர்களுக்கும் மும்பை அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதே போல மற்றொரு தனி விமானம் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் வழியாக மேற்குஇந்திய தீவுகள் செல்ல இருக்கிறது. இதில் குயிண்டன் டி காக், மார்கோ ஜான்சன் போன்ற தென் ஆப்பிரிக்க வீரர்கள் புறப்படுகின்றனர். இந்த விமானம் அடுத்த 24 முதல் 48 மணி நேரங்களில் புறப்பட இருக்கிறது. இறுதியில் மேற்கு இந்திய தீவுகளில் உள்ள Trinidadக்கு சென்று அங்கு கிரன் பொல்லார்டை இறக்கி விட உள்ளது

இங்கிலாந்து வீரர்கள் 11 பேரில் 8 பேர் ஏற்கனவே லண்டனில் தரையிறங்கி உள்ளனர். எஞ்சியவர்கள் விரைவில் செல்ல இருக்கின்றனர்.

இதே போல சொந்த நாட்டு வீரர்களுக்காகவும் தனி விமானங்கள் இயக்கப்பட உள்ளன. அகமதாபாத்தில் இருந்து இரண்டு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஒன்று சென்னைக்கும், பெங்களூருவுக்கும் செல்கின்றன. மற்றொன்று டெல்லிக்கு புறப்படும் என கூறப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!