விளையாட்டு

இன்ஷூரன்ஸும் கிடைக்காது. பிசிசிஐக்கு நெருக்கடி!

76views

கொரோனா காரணமாக ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் அதற்கான இழப்பீட்டு தொகையும் பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து ஐபிஎல் போட்டிகள் காலவரையறையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் வீரர்கள் எப்போது அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு 2000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஒளிபரப்பு மூலம் வரும் விளம்பர வருமானம் உள்ளிட்டவைகளை இப்போது பிசிசிஐ இழந்துள்ளது. ஐபிஎல் தொடரை 3500 கோடி ரூபாய்க்கு பிசிசிஐ காப்பீடு எடுத்திருந்தாலும், புயல், மழை மற்றும் தீவிரவாத தாக்குதல் போன்ற காரணங்களால் தொடர் நிறுத்தப்பட்டால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாம். அதில் கொரோனா இல்லாததால் இப்போது எந்த இழப்பீட்டுத் தொகையும் கிடைக்காதாம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!