விளையாட்டு

முதல் விக்கெட்டுக்கு 99 பந்துகள் எடுத்துக்கொண்ட டேனியல் சாம்ஸ்

69views

ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்டை எடுக்க டேலியஸ் சாம்ஸுக்கு 99 பந்துகள் தேவைப்பட்டுள்ளது.

 

ஐபிஎல் 2021 தொடரில் பெங்களூரு அணிக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் பஞ்சாப் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றி மூலம் பஞ்சாப் அணி 6 புள்ளிகளைப் பெற்று 5 ஆவது இடத்துக்கு முன்னேறியது.

இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்து 179 ரன்களை அடித்தது. பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல் 91 ரன்களும், கிறிஸ் கெயில் 46 ரன்களும் அடித்தனர்.

இதில் கிறிஸ் கெயில் விக்கெட்டை டேனியல் சாம்ஸ் கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் டேனியல் சாம்ஸுக்கு இது முதல் விக்கெட்டாகும். இந்தப் போட்டி இவருக்கு 5ஆவது ஐபிஎல் போட்டியாகும்.

முதல் 4 போட்டிகளிலும் பந்துவீசினாலும் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்றவில்லை. முதல் விக்கெட்டை எடுக்க டேலியஸ் சாம்ஸுக்கு 99 பந்துகள் தேவைப்பட்டுள்ளது.

முதல் ஐபிஎல் விக்கெட்டுக்கு முன் அதிக பந்துகள்

1) அனில் கும்ப்ளே – 123 பந்துகள்

2) டேலியல் சாம்ஸ் – 99 பந்துகள்

3) கிறிஸ் கெயில் – 93 பந்துகள்

4) பங்கச் சிங் – 87 பந்துகள்

5) மார்னே மார்கல் – 85 பந்துகள்

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!