கர்நாடகாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளிகள் 3,500 பேர் மாயமான நிலையில் அவர்கள் தமிழகத்தில் ஊடுருவி இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை மிகக்கடுமையாக உள்ளது. கர்நாடகா மாநிலத்தில் தொற்றுப் பரவல் மிக வேகமாக இருப்பதால் அங்கு முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதிக அளவில் மக்கள் பாதிக்கப்படுவதால் அறிகுறி இல்லாதவர்கள் வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அப்படி வீட்டில் இருக்க அறிவுறுத்தப்பட்டவர்கள் தான் தற்போது தலைமறைவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுமார் 3500 பேர் வீட்டை விட்டு வெளியேறி விட்டதாக கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரும் தங்களது போனை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறிவிட்டனர். அவர்களை தேடும் பணியில் கர்நாடகா சுகாதாரத்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்
இந்நிலையில் அவர்கள் கக்க நல்லா சோதனைச் சாவடி வழியே நீலகிரி மாவட்டத்திற்குள் ஊடுருவ இருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து போலீஸார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் இரு மாநில காவல்துறையினருக்கும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.