தமிழகம்

சென்னையில் காவல்துறையினர் 200 இடங்களில் சோதனை

92views

ன்று தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருவதால் சென்னையில் 200 இடங்களில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று அமலுக்கு வந்தன. தேநீர், பலசரக்கு, உணவகம், வணிக வளாகங்கள், ஜவுளி மற்றம் நகைக்கடைகள் இரவு 9 மணி வரை செயல்படும். சுற்றுலாத் தளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

திரையரங்குகள் ஏற்கனவே உள்ளது போல் 50% பார்வையாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம். விதிகளை பின்பற்றாவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐடி ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது . அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படும் .

பூங்காக்கள் , உயிரியல் பூங்காக்கள் செயல்பட அனுமதி இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது . அதே போல் ஞாயிறு அன்று முழு முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. அன்றைய தினம் உணவகங்களில் பார்சல் உணவு மட்டும் வழங்கப்படும்.

இந்நிலையில் இன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதால் சென்னையில் காவல்துறையினர் 200 இடங்களில் சோதனையில் ஈடுபட உள்ளனர்.

அதே போல் ஞாயிற்றுக்கிழமை நாள் முழுவதும் வாகன தணிக்கை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!