உலகம்

தமிழ்நாட்டின் பெருமை துபாயில்! தமிழக தொழிலதிபர் முகம்மது ஷாலி தலைமையிலான ‘பேட்மிண்டன் வாரியார்ஸ்’ அணி அசத்தல்

20views
துபாய் :
துபாய் ஸ்போர்ட்ஸ் கவுன்சில் அனுமதியுடன், சர்வதேச விளையாட்டு கமிட்டியின் (AISC) கீழ் செயல்படும் என்கேஜ் ஸ்போர்ட்ஸ் அரேனா ஏற்பாடு செய்த பேட்மிண்டன் பிரிமியர் லீக் (BPL) போட்டி வெற்றிகரமாக நடைபெற்றது. போட்டியின் மேலாளராக என்கேஜ் அரேனாவின் ஜமால் பக்கர் செயல்பட்டார்.  இதில் 4 அணிகளைச் சேர்ந்த 80 பேர் பங்கேற்றனர்.
இதில், தமிழகத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், ஆல்பா மெட்டல்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான முகம்மது ஷாலி தலைமையிலான ‘பேட்மிண்டன் வாரியார்ஸ்’ அணி சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டியில் 105-80 என்ற புள்ளிகள் கணக்கில் ரவுண்ட் ராபின் முறையில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
கேப்டன் சல்மான், துணை கேப்டன் இராமநாதபுரம் கான் முகமது, துணை கேப்டன் சியாம்லால் ஆகியோரின் அசத்தலான ஆட்டமும், தலைமையும் மற்ற வீரர்களை சிறப்பாக வழிநடத்தியதும், வெற்றிக்கு முக்கிய வழிவகுத்தது. “தொழில் துறையில் வேலைப்பளு அதிகமாக இருந்தாலும், பேட்மிண்டன் விளையாடுவது மட்டுமன்றி, தகுதியான விளையாட்டு வீரர்களை ஆதரிப்பது எனது உண்மையான ஆர்வம்,” என முகம்மது ஷாலி தெரிவித்தார்.
தகுதியான வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில், அவர்களின் பதிவு கட்டணம், பயிற்சி கட்டணம், விளையாட்டு சீரூடை, பரிசுத்தொகை, மட்டுமல்லாமல் பயிற்சி மற்றும் போட்டி நாட்களில் உணவு வசதி ஆகியவற்றையும் முகம்மது சாலி தனிப்பட்ட முயற்சியில் வழங்கி வருகிறார். தமிழக வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த திறமையான வீரர்கள் www.badminwarriors.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“இந்த போட்டியில் பங்கேற்பதன் மூலம் தமிழக வீரர்களின் திறமை, துபாய் மண்ணில் ‘பேட்மிண் வாரியார்ஸ்’ வழியாக ஒளிரும்,” என முகம்மது ஷாலி நம்பிக்கை தெரிவித்தார். இந்த குழுவில் இணைய 050 628 2427 என்ற தொலைபேசி எண் அல்லது shaali33@gmail.com என்ற ஈமெயில் மூலம் தொடர்பு கொள்ளலாம்.  ஒரு தமிழனாக நாமும் ஷாலியை வாழ்த்துவதுடன் அவருடைய முயற்சிகளுக்கு துணை நிற்போம்!!

Right Click & View Source is disabled.

error: Content is protected !!