தமிழகம்

மக்களுக்கு ஷாக் கொடுக்கும் தவெக அரசின் ஸ்மார்ட் மீட்டர் திட்டம்

26views
200யூனிட் இலவசம், விவசாய மின்சாரம் இலவசம், கைத்தறி மின் மானியம், பறிப்போகும் நிலை, வீடுகளுக்கு அதிக மின் கட்டணம் ஏற்படும் அபாயம்.
மின் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த டெண்டர் கோரியுள்ள தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தின் முடிவை கைவிட வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி மாநில தலைவர் வசீகரன் * வலியுறுத்தியுள்ளார்.*
ஸ்மார்ட் மீட்டர் திட்டம் மின் வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சி. மின்சார திருத்த மசோதா நிறைவேறாத நிலையிலும், ஒன்றிய பாஜக அரசு மாநிலங்கள் மீது நிர்பந்தம் செய்கிறது.
2023-ல் திமுக அரசு இதே டெண்டரை கொண்டு வந்தபோது அரசியல் கட்சிகள் மற்றும் பல தரப்பின் எதிர்ப்புகளால் திரும்பப் பெறப்பட்டது.
தற்போது தவெக அரசும் அதே பாதையில் 12 மண்டலங்களில் துவக்கியுள்ளது.
தமிழகத்தில் Totex என்ற முறையில் தனியாரிடம் கொடுப்பது தனியார்மயத்தின் நகர்வு.
இதனால் 200 யூனிட் இலவச மின்சாரம், விவசாய இலவச மின்சாரம், கைத்தறி மானியம் உள்ளிட்ட சமூக நல திட்டங்கள் பாதிக்கும். வீடுகளுக்கும் அதிகபட்ச நேர கட்டணம் விதிக்கப்படும்.
மாநில உரிமை, சமூக நீதி, வேலைவாய்ப்பு பாதிக்கும் என்பதால் அரசு இந்த முடிவை கைவிட வேண்டும் என தமிழக ஆம் ஆத்மி கட்சி சார்பில் தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
வசீகரன்
மாநில தலைவர்
ஆம் ஆத்மி கட்சி
தமிழ்நாடு
11/10/ 2026

Right Click & View Source is disabled.

error: Content is protected !!