தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடியில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சான்றிதழ் வழங்கும் முகாம்

29views
வேலூர் அடுத்த காட்பாடி ஸ்ரீலட்சுமி பங்ஷன் ஹாலில் காட்பாடி காந்திநகர் அனைத்து வணிகர் சங்கம் உணவக உரிமையாளர்கள் சங்கம் சார்பில் FOSTACTRAINING CLASS பயிற்சி வகுப்பு முகாம் நடந்தது.  தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு வேலூர் மண்டல தலைவர் ஞானவேலு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் பிரபாகரன், காட்பாடி உணவு பாதுகாப்பு அலுவலர் கஸ்தூரி ஆகியோர் கலந்துகொண்டனர்.
வேலூர் மாவட்ட ஓட்டல் சங்க பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். ஏற்பாட்டை ஓட்டல் சங்க நகர தலைவர் கே.ஆர்.ரவி, நகர செயலாளர் சுரேஷ் குணசேகர். பெருளாளர் பைசல் அகமது இக்பால்,வணிகர் சங்க நகர தலைவர் பழனியப்பன், நகர செயலாளர் ஆர்.சரவணன், பொருளாளர் டி.எஸ்.சரவணன் உள்ளிட்டோர் செய்து இருந்தனர்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!