கவிதை

மகள்கள் தினம்

26views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
பூமிக்குள் புதைந்தவர்கள்
புன்னகைத்துச் சிரிக்கிறார்கள்
கண்கள் மலர்வதற்கு முன்பே
மண் மூடியவர்கள்
புதிதாக மலர்கிறார்கள்…
பெண் புதைகுழிகளின் தேசம்
புத்துணர்ச்சி பெற்றிருக்கிறது…
உலகின் எந்தப் புறங்களையும் விட
எல்லாத் துறைகளிலும்
மறுமலர்ச்சி
கொண்டு இருக்கிறது
எந்த காரணங்களுக்காக
அந்தக் குழந்தைகள்
புதைக்கப்பட்டார்களோ
அந்தக் காரணங்களெல்லாம்
எழுச்சிப் பட்டறைகளில்
இன்னிசை முழக்கங்களாகி இருக்கின்றன…
எல்லாத் துறைகளும்
அவர்கள் முற்றங்களுக்குள்
கொண்டுவரப்படுகின்றன…
வாடிக்கிடந்த பாலைவன வெளி
சூடிக்கொடுக்கும்
சுடர் மணிகளால்
சோதி மயமாக இருக்கிறது….
எப்போதும் போல் இல்லாமல்
முப்போதுக்குமாகப் பிறந்த
ஒரு விடிகதரின் வெளிச்சம் தான்
அவர்களின் விழிகளுக்குள்
மின்னலைப் பாய்ச்சி இருக்கிறது
அது ஒளியிழைகளால் ஆனது
என்பதால்
அவர்கள் உலகமே
புத்தொளிகளால்
கந்தர்வப்பட்டு இருக்கிறது…
கல்வி, மணம் சொத்துரிமை எல்லாம் ஆகும்…
எதுவும் தடையன்று …
எல்லா அறிவியல் வளர்ச்சிகளிலும்
அவர்கள் ஆதிக்கம்…
வானவெளிகளில்
அவர்களின் சாகசம்…
விரல் நுனிகளுக்குள் விளைகின்ற
புதுப்புது விந்தைகள் வித்தைகள்…
இன்றும்
தொடர்ந்து கொண்டே இருக்கும்
அந்த அற்புதம்
நபிகள் பெருமானார்
கொண்டு வந்த
நடைமுறைகளால் சாத்தியமானது…
ஆனால் நல்லவற்றுக்கெல்லாம்
கதவடைத்துக் கொள்ளும்
ஒரு கழிசடைக் கலாச்சாரம் மட்டும்
அவர்களின் அத்தனை வளர்ச்சிகளையும்
மீண்டும் புதைகளுக்குள் போட்டு
மூடப் பார்க்கிறது…
முக்காட்டுக்குள் மூடி வைக்க முயல்கிறது…
போகட்டும்
அவர்கள் மலர்களின் நறுமணங்கள் மறுக்கும்
மூத்திரக் குடிகள்…
மனுதர்ம சாத்திரக் குடிகள்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!