தமிழகம்

வேலூர் அடுத்த காட்பாடி அக்சிலியம் கல்லூரியில் 2 நாள் பன்னாட்டு கருத்தரங்கம்-ICBA நெக்சஸ் 2026

24views
வேலூர் அடுத்த காட்பாடி காந்திநகரில் உள்ள அக்சிலியம் (தன்னாட்சி) கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை, சென்னை மெட்ராஸ்மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் மற்றும் வேலூர் அம்பாலால் ஷேர்ஸ் அண்ட் ஸ்டாக்ஸ் பிரைவேட் லிமிடெட்டியுடன் இணைந்து 2 நாள் கருத்தரங்கம் நடந்தது. வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் முனைவர் பீபுலா சுரேஷ் வரவேற்றார்.
ஆஸ்திரேலியாவின் பால்கம் ஹில்ஸ் ரப் ஆர்க் பில்டிங் டிசைன்ஸ் நிறுவன இயக்குநர் ரூபினா சையத் மற்றுப் அம்பாலால் க்ரூப் தலைவர் ஜவஹர்லால் ஜெயின் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினர்.  கல்லூரி செயலாளர் முனைவர் சகோ மேரி ஜோசஃபின் ராணி தலைமை தாங்கினார். முதல்வர் முனைவர் சகோ ஆரோக்கிய ஜெயசீலி, மேலாண்மைதுறை இயக்குநர் முனைவர் சகாயமேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல் நாள் கருத்தரங்கில் விஐடி பேராசிரியர் சரவணகுரு, விஐடி ஆராய்ச்சி உதவியாளர் தஹ்மினா அக்தர் மில், டெல்லி ஜெயசுந்தரி மற்றும் இரண்டாம் நாளில் பெங்களூரு மவுண்ட் கார்மல் நிர்நிலைப் பல்கலைகழக உதவி பேராசிரியர் ஸ்டான்லி வின்சென்ட் ,உலக வங்கி குழும தரவு பகுப்பாய்வாள நவீன புதுச்சேரி பல்கலைக்க பேராசிரியர் சுதாகர், அமெரிக்கா, எண்டேவர் தெற்கு பிராந்திய இயக்குநர் பிரேமலதாமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
முடிவில் கல்லூரி மருத்துவ வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர்முனைவர் பிரீத்தி பிரபாகரன் நன்றி கூறினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!