தமிழகம்

‘இறைவன் தொப்புள் கொடி உறவுகளுக்கு அருள் புரிவார் நாமும் துணை நின்று உறவுகளுக்கு தோள் கொடுப்போம்; இஸ்லாமிய சொந்தங்களுக்கு மிலாது நபி நல்வாழ்த்துக்கள்’ தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜி ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

38views
இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஜி ஜி மிலாது நபி நல்வாழ்த்துக்கள் – தேசிய முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் ஜி ஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருப்பதாவது:
உலகத்திற்கே மனிதநேயம் மற்றும் ஈகை குணத்தை எடுத்துரைத்து கண்ணியத்தின் அடையாளமாக திகழும் இஸ்லாமியர்களின் வாழ்வியலிலும் உயிரிலும் கலந்து இன்றளவும் வாழ்ந்து வரும் இறைத்தூதர் ஐயா நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை மகிழ்விக்கும் நாளான மிலாது நபி நாளான இன்று இந்தியா முழுவதும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளுகின்ற மத்திய பாஜக அரசின் மூலமாக நம் நாட்டிற்காக பல லட்சம் மக்கள் உயிர்த்தியாகம் செய்து சுதந்திர காற்றை சுவாசிக்க செய்த இஸ்லாமிய சொந்தங்களை மாற்றான் தாய் பிள்ளையாக நடத்தி வரும் மத்திய அரசின் இந்த சூழலை தொடர்ந்து தேசிய முன்னேற்றக் கழகம் பல வருடங்களாக உணர்வு பூர்வமாக எதிர்த்து வருகிறது.
காரணம் உலகத்திற்கே மனசாட்சி படியும் மனிதநேயப் படியும் வாழ்வது எப்படி என இஸ்லாமிய உறவுகள் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறார்கள். ஆங்கிலேய ஏகாதிபக்திகளின் ஆட்சியில் இந்தியா அடிமைப்பட்டு கிடந்த போது இந்திய விடுதலைக்காக ஒட்டுமொத்த இஸ்லாமிய உறவுகளும் தனது பொன் பொருள் அனைத்து சொத்துக்களையும் கடைசியாக தனது உயிர்களையும் தியாகம் செய்து சுதந்திரம் பெற்று தந்ததில் பெரும் பங்கு இஸ்லாமிய உறவுகளுக்கு இருந்திருக்கிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது. நிலைமை இப்படி இருக்க இன்று மத்தியில் பாஜக அரசின் கீழ் நாடு எங்கும் இஸ்லாமிய உறவுகள் பெரும் துயரத்திற்கும் பாதிப்பிற்கும் ஆளாகி வருகிறது இது ஒரு ஜனநாயக நாட்டிற்கு நல்லதாக அமையாது.
இது போன்ற சூழலில் ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு மதவாத சக்திகளுக்கு எதிராக களத்தில் நின்று நீதியை வெல்லுகின்ற நிலைப்பாடோடு மிலாது நபி நன் நாளில் இசுலாமிய தொப்புள் கொடி உறவுகளுக்கு துணை நிற்போம். இனி வரும் காலங்களில் எவ்வித துயரங்களிலும் பாதிக்கப்படாத வண்ணம் இறைவன் தொப்புள் கொடி உறவுகளுக்கு அருள் புரிவார் நாமும் துணை நின்று உறவுகளுக்கு தோள் கொடுப்போம் என தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பாக அன்பு உறவுகளுக்கு மிலாது நபி நல்வாழ்த்துக்கள் சொல்வதில் மகிழ்கிறேன், இவ்வாறு அறிக்கையில் ஜி ஜி குறிப்பிட்டு இருக்கிறார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!