44views
கவிதா குமாரி
தாராபுரம்
இப்போது சுதந்திரக் காற்றை
நாம் சுகமாக சுவாசிக்க
அன்று தியாகிகள் தன்
சுவாசத்தையே தியாகம்
செய்தார்கள்!
அகிம்சை முறையில்
போராடி வென்றனர்,
பல இம்சைகள் பட்டு
குண்டடி பட்டு மாய்ந்தனர்,
பல வெள்ளையரின் வெறிச்சயலாலே !
சுதந்திரம் வாங்க அவர்கள் சிந்திய
உதிரத்தின் வாசம் ,இன்றும் வீசுகின்றது !
பட்டொளி வீசிப் பறக்கும் நம் தேசியக் கொடி!
சுதந்திரம் பெற்றுத் தந்த தியாகிகள்
பலருக்கும் இன்று நினைவில் இல்லை!
சுதந்திரம் என்பது
இரண்டு மிட்டாய் வாங்கி
கொட்டாவி விட்டுவிட்டு
விட்டால் போதும் என்று
ஓடுவதே இன்றுள்ள நிலை!
முன்னோர்கள் செய்த தியாகத்தாலேதான்
இப்போது நீங்கள் சுதந்திரமாக
மூச்சு விடுகிறீர்கள் என்பதையும் மறந்து
போனதேனோ?
உணருங்கள் சுதந்திரமே
நம் சுவாசம்!
add a comment






