தமிழகம்

வேலூரில் ஆயர்குல யாதவர் சங்கம் சார்பில் அழகுமுத்துக்கோன் 269 -வது ஜெயந்தியை முன்னிட்டு படத்திறப்பு மற்றும் குருபூஜை

28views
வேலூர் ஆட்சியர் அலுவலகம் எதிரில் வேலூர் ஆயர்குல யாதவர் சங்கம் சார்பில் இந்திய சுதந்திர போராட்டத்தின் வீரர் அழகுமுத்துக்கோன் 269 -ம் ஆண்டு ஜெயந்தியை முன்னிட்டு படத்திற்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
மாவட்ட தலைவர் கங்காதரன் யாதவ், கௌரவத் தலைவர் குமரன் யாதவ், மாவட்ட பொதுச்செயலாளர் ரமேஷ் யாதவ், ஏற்பாட்டில் நடந்தது.

இதில் அதிமுக மாவட்ட செயலாளர் அப்பு, அணைக்கட்டு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் வேல கழன், வேலூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் வினோத் கண்ணன், ஜிஜிஆர் கோகுல், தமிழ்நாடு யாதவ் சங்க மாநில இணை செயலாளர் சேதுமாதவன் மாநில துணைத்தலைவர் ஜவகர், முன்னாள் காங்… சேர்மன் தேவேந்திரன் மற்றும் யாதவர் சங்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அன்னதானமும் செய்யப்பட்டது. முடிவில் வேலூர் மண்டல மாவட்ட தலைவர் கங்காதரன் யாதவ் நன்றி கூறினார்.
கே.எம். வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!