தமிழகம்

ஹைக்கூ வனம் தொடக்க விழா

33views
ஜப்பானிய கவிதை வடிவமான ஹைக்கூ இன்று தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் பரவலாக எழுதப்பட்டும் பேசட்டும் வருகிறது.. இறுதியாகவும் அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவும் அவ்வளவாக பொது அமைப்புகள் இல்லாத ஒரு சூழலில், சென்னை பட்டாபிராமில் அன்பின் சங்கமம் ஹைக்கூ வனம் என்ற அமைப்பின் வழியாக பல கவி ஆளுமைகள் ஒன்றிணைந்து இதன் தொடக்க விழாவை சென்னை பட்டாபிராமில் அன்பின் சங்கமம் ஹைக்கூ வனம் என்ற அமைப்பின் வழியாக பல கவி ஆளுமைகள் ஒன்றிணைந்து இதன் தொடக்க விழாவை 19 7 2026 ஞாயிறு மாலை நாலு மணிக்கு கொண்டாடினர்.
விழாவிற்கு தலைமை தமிழக ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி திருமிகு ஓவிய கவிஞர் அமுதபாரதி அவர்கள் ஏற்று சிறப்பித்து இருந்தார்.
இவ்வமைப்பின் தலைவர் திருமிகு கவிஞர் சுப்புராஜ் அவர்களும், நண்பர்கள் குடும்ப நற்பணி மன்றத்தின் நிறுவனர் திருமிகு பா கண்ணையா அவர்களும் நிகழ்விற்கு முன்னிலை வகித்தனர். அன்பின் சங்கமம் ஹைக்கூ வனம் அமைப்பின் இலட்சணையை லோகோ எழில் இலக்கிய பேரவை தலைவர் திருமிகு முனைவர் எழில் சோம பொன்னுசாமி அவர்களும், கல்வெட்டு பேசுகிறது இலக்கிய இதழ் ஆசிரியர் திருமிகு கவிஞர். சொர்ண பாரதி அவர்களும் வெளியிட்டு சிறப்பு செய்தனர்.
இவ் அமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் தமிழ் ஹைக்கூ கவிதைகளின் குறிப்பிடத்தக்க படைப்பாளியும் ஆன திருமிகு.கவிஞர். செல்லம்மாள் கண்ணன் தன் கைப்பட எழுதிய அனைத்து ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகளும் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது, கண்காட்சியை தமிழ் திரு சீதா கோபாலகிருஷ்ணன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.
செல்லம்மாள் கண்ணன் சுப்புராஜ் அன்பு செல்வி சுப்புராஜ் இவர்கள் 3 பேரும் இணைந்து எழுதிய மௌனம் நிசப்தம் இன்பம் ஹைக்கூ கவிதை நூலை ஹைக்கூவனம் அமைப்பின் செயலாளர் திரு.கவிஞர் சஞ்சீவி மோகன் அவர்கள் விமர்சித்து ஆய்வு பேருரை ஆற்றினார். நிகழ்வின் முத்தாய்ப்பாக பள்ளி மாணவர்கள் சிலர் தாங்கள் வாசித்ததில் பிடித்த ஹைக்கூ கவிதைகளை வாசித்துக் காட்டி பார்வையாளர்களை பரவசப்படுத்தினார்.
மேலும் நிகழ்விற்கு வந்திருந்த ஹைக்கூ கவிஞர்கள் பலரும் தங்களது ஹைக்கூக்களை வாசித்து அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். எழில் இலக்கிய பேரவை அமைப்பின் கவிஞரும் உளவியல் அறிஞருமான கவி தங்க ஆரோக்கியதாசன், சஞ்சீவி வனம் கல்வி ஆலோசனை மையம் நிறுவனர் தமிழ் திரு பா. விஜயலட்சுமி சுந்தர்ராஜன் அவர்களும் வாழ்த்துரை வழங்க நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது.
-கோ.மகேசன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!