உலகம்

துபாயில் ‘தென்பாண்டிச் சீமையிலே’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி

27views
துபாய் :
துபாய் அல் மம்சார் பகுதியில் உள்ள அல் கரிப் மஜ்லிசில் கீழக்கரை வரலாற்று ஆய்வாளர் ச.சி.நெ. அப்துல் ரெஸாக் எழுதிய ‘தென்பாண்டிச் சீமையிலே’ நூல் வெளியீட்டு விழா நடந்தது.
இந்த விழாவில் ஃபாஸ்ட் கூரியர் நிறுவனத்தின் சேர்மன் முஹம்மது ஃபாரூக் நூலை வெளியிட முதல் பிரதியை துபாய் சமூக மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வரும் கிரீன் குளோப் தன்னார்வ தொண்டு அமைப்பின் நிறுவனர் டாக்டர் ஜாஸ்மின் அபுபக்கர் பெற்றுக் கொண்டார்.
இந்த விழாவில் பங்கேற்று பேசிய ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத், ச.சி.நெ. அப்துல் றஸாக் கீழக்கரையைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழக வரலாற்றாய்வாளர், எழுத்தாளர் மற்றும் ஆய்வாளர் ஆவார். இவர் தென்னிந்தியாவின், குறிப்பாக இராமநாதபுரம் மாவட்டத்தின் மற்றும் கீழக்கரையின் இஸ்லாமிய வரலாற்றுப் பின்னணி தொடர்பான பல அரிய நூல்களை எழுதியுள்ளார்.
“ஆட்சி பீடம் கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹூ”, “சேது நாட்டு பெரிய தம்பி வள்ளல் சீதக்காதி” (நவீனம்), “பாலஸ்தீன வரலாறு” போன்ற பல நூல்களை எழுதியுள்ளார்.  இவர் எழுதிய வரலாற்று நூல்கள் துபாயின் பிரமாண்டமான முஹம்மது பின் ராஷித் நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு, அங்குள்ள ஆவணக் காப்பகத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.  கீழக்கரை மற்றும் தமிழகத்தின் பாரம்பரிய வரலாற்றுப் பெருமைகளை எழுத்து வடிவில் கொண்டு வருவதில் இவரது பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது என்றார்.  இந்த விழாவில் பெரியபட்டிணம் முஹம்மது அபுபக்கர், டாக்டர் ஹுமைத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!