கட்டுரை

நிரந்தரமற்றுப்போன நிழற்படக்கலை

86views
கா.வெங்கடேஸ்வரன்
மனித நாகரீகம் வளர்ச்சியின் பாதையில் முன்னேறுவதற்கு காரணமே தொழிற்புரட்சிதான் அப்படிப்பட்ட தொழில்களில் கலையை மையமாகக்கொண்டு இயங்கிவந்த, வருகின்ற தொழில்தான் புகைப்படத்தொழில் தன் இருப்பை பதிவுசெய்யும் ஓவியங்களின் அடுத்த நகர்வுதான் புகைப்படம் முதலில்
கடந்த நூற்றாண்டைவிட இந்த இருபத்தியோராம் நூற்றாண்டில்தான் அசுரவளர்ச்சி கொண்டிருக்கிறது தொழில்நுட்பம் இருப்பத்தியோராம் நூற்றாண்டு அதைவிட இன்னும் பாய்ச்சலில் மின்னல் வேகத்தில் முன்னேறிக்கொண்டிருக்கிறது தொழில்நுட்பம். கணினியின் பயன்பாட்டை சார்ந்தே மையப்பட்டதென்றாலும் தனிப்பட்ட நபரின் வருவாயை அடிப்படையாகக்கொண்டு ஒப்பீடுசெய்தால் இத்தொழில் அப்படியில்லை இது மக்களின் அத்தியாவசியத்தேவைகளில் இடம் பெறுவதில்லை தன் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக்கொள்ளவும் குடும்பத்தாரின் ஆடம்பர செலவுகளில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.
மனிதன் தனது வளர்ச்சியின் பங்களிப்பில் முதல் தேவை உணவு பின் உடுத்த உடை இந்த இரண்டின் தேவைகளுக்காக தேடல் விரிவடைந்தது சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டபோதுதான் தொழிற்புரட்சி உருவாகிறது. அதன் பின்னாளில் ஒவ்வொரு இயந்திரங்கள் கருவிகள் அந்த பட்டியலில் இந்த கேமராவும் கேமராவைக்கொண்டு தொழில் தொடங்கி அதாவது Studio தொடங்கியது பதினெட்டாம் ற்றாண்டுகளில்தான் என்றாலும் இந்தியாவில் 19ம் நூற்றாண்டில்தான் பரவலாகிறது
இந்தப்புகைப்படத்தொழிலில் லாபமும் நட்டமும் சரிபாதியாக உள்ளது. அன்றைய நாளில் குறிப்பாக 80களில் ஒரு புகைப்படம் எடுத்தால் ஓரிரு நாள்கள் அல்லது ஒரு வாரம்கூட ஆகிவிடும் அது அவரவர் studio தொடங்கப்பட்டிருக்கும் இடத்தை பொறுத்தது பெரியநகரங்களில் உள்ளவர்கள் டெவலப்பர்ஸ் & பிரிண்ட்டர்ஸ் ஒத்துழைப்போடு உடனடியாக அதாவது மறுநாள் அல்லது மூன்றாவது நாள் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்க முடிந்தது. சிறிய நகரங்களில் மற்றும் புறநகர் பகுதியில் உள்ளவர்கள் போக்குவரத்து காரணம் கருதி கொஞ்சம் தாமதமாகவே டெலிவரி கொடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.

இன்று அப்படியில்லை நிறைய பிரிண்ட்டர்ஸ் (Lab) உருவாகிவிட்டது அதிவேக நவீன லேசர் பிரிண்ட்டர்கள் மூலம் உடனுக்குடன் வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி கொடுக்கமுடிகிறது.
ஆனாலும் இதில் நிறைய லாபமென்று சொல்லிவிடமுடியாது இப்போதுள்ள தலைமுறையில் நிரந்தர வருவாய் என்பது சாத்தியமற்ற ஒன்றுதான்.
ஏனென்றால்……எந்தவொரு தொழிலிலும் ஒரு ஆர்டர் கொடுத்தால் குறிப்பிட்ட தொகையை முன்பணமாக பெற்றுக்கொண்டுதான் செய்துமுடித்துவிட்டு பாக்கி உள்ள தொகையை பெற்றுக்கொள்வார்கள்.
போட்டோகிராஃபி அப்படியில்லை திருமணம் மற்றும் சுபநிகழ்ச்சிகளுக்கு நடுத்தரமக்களும் அதற்கும் கீழான பொருளாதாரத்தன்மை கொண்டவர்கள் ஆர்டர் கொடுக்கும்போது ஆயிரம் ரெண்டாயிரமென்று முன்பணம் கொடுக்கிறார்கள் நிகழ்ச்சி முடிந்ததும் அவர்களின் அவசியத்திற்கேற்றவாறு மற்ற செலவுகளை கவனத்தில் கொண்டு போட்டோகிராஃபருக்கு மீதமுள்ள தொகையை கொடுக்க மிகவும் சிரமத்தை மேற்கொள்கிறார்கள்
அவர்களின் இயலாமையால் போட்டோ ஆல்பங்களை பெறாமல் நிலுவையில் வைத்துவிடுகிறார்கள் அது அவரவர் குடும்பப்பிண்ணனி அவர்களைமட்டுமே ஒட்டுமொத்தமாக குறைசொல்லுவது மிகவும் யோசிக்கவேண்டிய விஷயம்.
கேமரா பொருத்தப்பட்ட அலைபேசிகள் என்று புழக்கத்தில் வந்ததோ அப்போதே 40 % இந்தத்தொழில் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்டது. நவீன டெக்னலாஜியின் பிடியில் மொபைல் கேமராக்களில் Pixel அளவு கூடகூட எல்லாவற்றையும் (நிகழ்ச்சிகளை) அலைபேசியின் மூலமாகவே முடித்துக்கொள்கிறார்கள்.
அப்போதெல்லாம் நிகழ்ச்சி முடிந்ததும் அதில் தேவையற்ற போட்டோக்களை நீக்கி நாங்களே (புகைப்படக்கலைஞர்கள்)ஆல்பம் போட்டு கொடுத்தோம் இப்போது எடுத்து முடித்ததும் வாடிக்கையாளர்களே குறிப்பாக மேல்தட்டு மக்கள்தான் இப்படி செய்கிறார்கள் studio வுக்கு நேரில் வந்து பக்கத்தில் அமர்ந்து இதெல்லாம் தேவையில்லை என்று எடுத்த படங்களில் சரிபாதிக்கும் மேலானவற்றை நீக்கச்சொல்லிவிடுகிறார்கள் அதற்கான கட்டணம் கேட்டால் எங்களுக்கு தேவை இதுமட்டும்தான் அதற்குமட்டும் பணம் செலுத்துகிறோம் என்று விவாதம் செய்கிறார்கள்.
உதாரணத்திற்கு: ஒரு வீடு கட்டுவதாக வைத்துக்கொள்வோம் வீட்டின் உரிமையாளர் சுமார் பத்து டன் மணலை ஆர்டர் கொடுக்கிறார். ஆனால், இவரின் தேவைக்கு 6 டன் போதும் மீதமுள்ள 4 டன் மணலை திரும்பபெற்றுக்கொள்ளவேண்டும் என்கிறார் அப்படியானால் அந்த மணலை ஏற்ற இறக்க மற்றும் லாரி வாடகை உட்பட அவருக்கு வழங்கவேண்டும்தானே.
அதே நிலைதான் இந்த புகைப்படகாரர்களுக்கும் கால்வலிக்க நின்று புகைப்படம் எடுக்கிறோம் அதில் உழைப்பிருக்கிறது ஒரு சராசரி DSLR கேமராவின் விலையே ஒரு லட்சத்திலிருந்துதான் தொடங்குகிறது கேமரா,லைட்டிங் மற்றும் கணினி சார்ந்த தொழில்நுட்பங்களை கொண்டுதான் ஒவ்வொரு புகைப்படமும் எடுக்கிறோம் அதன் தேய்மானங்கள் மின்சாரம் மற்றும் உதவியாளர்களின் ஊதியம் இப்படி எல்லாவகையிலும் சொல்லிக்கொண்டே போகலாம்.
இவ்வளவு முதலீடுகளை போட்டுவிட்டு வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப வளைந்து கொடுக்கவேண்டுமென்றால் அதில் நிறைய இழப்புதான். அதுவும் உழைப்பின் இழப்பு.
எல்லாவற்றையும் மீறி பணத்தை கொட்டி கொட்டி நிறைய Update ஆகும் புகைப்படக்கலைஞர்கள் ஒரு பக்கம் உயரிய வர்க்கத்திலிருக்கும் சிலர் நடுத்தரவர்க்கத்திலிருக்கும் சிலர் என ஒரு குறிப்பிட்ட இளைஞர்கள் நிகழ்ச்சியை பதிவுசெய்யும்முன்பே எந்த வகையான கேமராவை கையாளபோகிறீர்கள் என்று கேட்டு தெரிந்துகொண்டபிறகுதான் ஆர்டரை கொடுக்கிறார்கள். இந்த மாதிரி வளமுள்ள, வளர்ந்த புகைப்படக்கலைஞர்களோடு போட்டி போடமுடியாமல் நிறைய கலைஞரகள் தங்களிடமிருந்த கேமராவையும் அதற்கு ஒப்பான கருவிகளையும் இரண்டாம் மூன்றாம்தர விலைக்கு விற்றுவிட்டு அந்த சொற்ப பணத்தை கொண்டு வேறு தொழிலை தொடங்கிக்கொண்டனர். இன்னும் சிலர் பெரிய தொழில்நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்துவிட்டனர்.
ஒரு சில studio க்கள் தங்களிடம் Update (அதிநவீன) கேமராக்கள் இல்லையென்றாலும் Exposing (Sub Order) மூலம் நிகழ்ச்சியை முடித்துகொடுக்கிறார்கள்.
தொழிலை தொடங்கிவிட்டோம். நாம் ஒரு போட்டோகிராஃபர் என்று அன்றுமுதல் இன்றுவரை தொழிலை விடாமல் அதில் போதிய வருவாய் இல்லாதபோது இதர வேலைகள் மூலம் Xerox, ஆன்லைன் சர்வீஸ் என்று பன்முக சேவைகளை இணைத்துக்கொண்டு வருவாய்க்கான வாய்ப்பை ஏற்படுத்திகொள்கிறார்கள். ஒரு படி மேலே போய் மளிகை கடை பேன்சி ஸ்டோர் என்று தொடங்கி அதில் ஒரு பகுதிநேர தொழிலாக போட்டோகிராஃபியை செய்துவருகிறார்கள்.
இன்றைய இளம் தலைமுறையினர் நவீன தொழில்நுட்பங்களை கற்றுக்கொண்டு களத்தில் இறங்குகிறார்கள் ஆதலால் அவர்களுக்கு இணையாக நம்மை நாமே Update செய்துகொண்டால் இருக்கும் கொஞ்சம் காலத்திற்காவது தொழிலை நகர்த்திகொண்டு போகலாம். என்னதான் நவீன தொழில்நுட்பத்தை கற்றுக்கொண்டு வந்து களத்தில் இyறங்கினாலும் நமக்கு மேலான ஆசான் அனுபவமே என்பதை உணர்ந்து வழிவழியாக வந்த புகைப்படக்கலைஞர்களை ஒதுக்கப்படாமல் அவர்களின் அனுபவங்களை ஓரளவு செவிசாய்த்து அதன்படி பயணித்தல் நன்று. கொரோனா காலகட்டத்தில் 2020 ல் ஊரடங்கின்போது படிப்படியாக எல்லா தொழில்களுக்கும் வழிவிட்டாலும் அரசு புகைப்படத்தொழில் அவ்வளவு அத்தியாவசமில்லை என்று 3 மாதம் முடக்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

இங்கே இன்னொரு பலவீனமும் உள்ளது. வாடிக்கையாளர்களும் புகைப்படக்கலைஞர்களும் போட்டிபோட்டு முந்திக்கொண்டு ஒரு செயலை செய்கிறார்கள். இந்த தேசம் மிகவும் பழமைமாறாத பண்பாடுகளிலிருந்தும் தன் மரபுகளிலிருந்தும் எப்போதும் விலகியதில்லை உணவு எவ்வளவு முக்கியமோ அதைவிட முக்கியம் உடை ஒருசில கலைஞர்கள் கலையை நவீனமாக்குகிறோம் என்று திருமண நிகழ்வுகளை பதிவுசெய்யும்போது எல்லைமீறுகிறார்கள். முத்தமிடுவதில் தொடங்கி கட்டியணைத்தல் தூக்கி கொஞ்சுதல் ஆறு குளங்களில் குளித்தல் நடனமாடுதல் என்று என்று சினிமா மோகத்தில் பதிவுசெய்கிறார்கள். அந்த காணொளிகளையும் ஆல்பத்தில் இடம்பெறும் படங்களையும் பார்க்கநேரிடும்போது குடும்ப உறுப்பினர்களே சில நேரங்களில் முகம்சுழிக்க வைத்துவிடுகிறது.
புகைப்படம் என்பது தூரிகையின்றி தீட்டப்பட்ட ஓவியம். அவைகளுக்கு எப்படி எடுக்கவேண்டுமென்கிற எண்ணமும் எவ்வளவு மிளிரவேண்டுமோ அந்த வண்ணமும் போதுமானது.
மொத்தத்தில் இனி வரும் காலங்களில் பிரிண்ட்போடும் பணிகள்கூட முடங்கிபோகும் அபாயமுண்டு டிஜிட்டல் தரவுகளின் மூலம் மெமரிகார்டுகள் இன்னும் நவீனமுறையில் உருவகப்படுத்தி Software மூலம் வடிவமைத்துக்கொண்டு System த்தில் Save செய்தால் போதுமானது இதனால் விற்பனையாளர்கள், ஆல்பம் டிசைனர், இதன் மூலம் மறைமுக வருவாய் ஈட்டுவோர் என அனைத்து தரப்பிலும் பாதிப்பு கோலோச்சும் அதைவிட கொடுமையாய் இன்று AI (Artificial intelligence) எல்லோரையும் மிரட்டிக்கொண்டிருக்கிறது.
இது மீளுமா இக்கலைஞர்களின் வயிற்றில் தீ மூளுமா காலத்திடமே பதில்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!