உலகம்

துபாயில் கிரீன் குளோப் அமைப்பு சார்பில் தொழிலாளர்களுக்கு உணவு விநியோகம்

66views
துபாய் :
தொழிலாளர்கள் நம் அமீரக உள் கட்டமைப்பின் நாயகர்கள் என்பதை உணர்ந்து, தொடர்ந்து பல வருடங்களாக அமீரக தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தி வரும் நமது கிரீன் குளோப் அமைப்பின் சார்பில் 16.05.2026 அன்று மாலை துபாய் டி ஐ பி 2 பகுதியில் உள்ள ஒரு தொழிலாளர் குடியிருப்பில், தொழிலாளர்களை மகிழ்விக்கும் விதமாக, சுமார் 3500 நபர்களுக்கு 2 கனரக வாகனங்களில் சுவையான உணவு (பிரியாணி) எடுத்து வந்து விநியோகிக்கபட்டது.
இந்த உள்ளம் மகிழ் நிகழ்ச்சியில் கிரீன் குளோப் உறுப்பினர்கள், ரசூல், அபுபக்கர், சாபீர், பீர் முஹம்மது, மற்றும் ஹீமைத் பிரவீன்,கலிபா, ரவுப், ஜன்னத், லிச்சு,சாயிரா,சுப்புராஜ், ஹாரீத் உள்ளிட்ட தன்னார்வலர்கள் கலந்துகொண்டு ஒத்துழைப்பு நல்கினார் .
இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பாகிய அனைத்து உள்ளங்களுக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!