உலகம்

துபாய் மண்டலத் தலைவர் அய்யம்பேட்டை முஹம்மது ஃபாருக் தலைமையில் நடைப்பெற்ற இரத்த தான முகாம்

186views
இன்று 12:04:2026 ஞாயிற்றுக்கிழமை இந்தியர் நலவாழ்வு பேரவை (IWF) துபாய் மண்டலம் சார்பாக மாபெரும் 54 வது இரத்ததான முகாம் அல் பராஹா மருத்துமனையில் மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த இரத்த தான முகாம் துபாய் மண்டலத் தலைவர் அய்யம்பேட்டை முஹம்மது ஃபாருக் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இம்முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அமீரக IWF தலைவர் அப்துல் ஹாதி, ஃபிம்கோ ரியல் எஸ்டேட் CEO முஹம்மது கலீல், பால் பிபாகரன் – TEPA, மூத்த பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத்துல்லாஹ், மற்றும் தொழிலதிபர் லால்பேட்டை முஹம்மது ரபீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
IWF அமீரக துணைத் தலைவர் A.S.இப்ராஹிம், மண்டல நிர்வாகிகள் கீழக்கரை ஜைனுல் ஆபிதீன் , பொருளாளர் சேக்தாவூது, அதிரை சேக் அப்துல் காதர், , ஹோர் அல் அன்ஸ் பொறுப்பாளர் முத்துப்பேட்டை சாதிக், சாகுல், அல்ஹுஸ் கிளை பொறுப்பாளர் அய்யூப், லால்பேட்டை துபாய் கிளை தலைவர் யாசர் அரபாத்,மற்றும் லால்பேட்டை துபாய் கிளை நிருவாகிகள் அஹமது மசூது அஹமது, அஸாருத்தீன், பஜீலுத்தீன்,அஹமது நயீம் சாஜித் அஹமது, ஜேபிஎல் அலி பொறுப்பாளர் ஆஷிக் உள்ளிட்ட அனைத்து IWF நிர்வாகிகளும் சிறந்த முறையில் ஏற்பாடுகள் செய்திருந்தனர். அனைவருக்கும் எம்முடைய வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும்.
அதிகமான மக்கள் இரத்தக் கொடை செய்தனர். இரத்த தானம் செய்த சகோதர்களுக்கு சான்றிதழ் மற்றும் காலை,மதியஉணவு வழங்கப்பட்டது.
இறுதியாக அனைவர்க்கும் உணவு எற்பாடு செய்த லால் பேட்டை சகோதர்களுக்கு மற்றும் அனைவருக்கும் எம்முடைய நன்றி வாழ்த்துக்களும், பிரார்த்தனைகளும் கூறி நிகழ்ச்சி நிறைவு செய்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!