உலகம்

ஷார்ஜாவில் ஆரா அகாடமியா கல்வி நிறுவன புதிய கிளை

133views
ஷார்ஜா :
ஷார்ஜாவில் ஆரா அகாடமியா கல்வி நிறுவனத்தின் புதிய கிளை அல் நக்தா பகுதியில் திறக்கப்பட்டது.  இந்த திறப்பு விழாவுக்கு அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஐஸ்வர்யா தலைமை வகித்தார்.  அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் பால் பிரபாகர், அமீரகப் பிரமுகர்கள், காசிம் அபூ அகமது, டாக்டர் ஹுசைன் யஸ்லம் பின்சுமிதா, இமான் ஹசன் அல் சவப் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று திறந்து வைத்தனர். மேலும் விவேக், ரவிசங்கர் உள்ளிட்ட 150 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அமீரக தமிழ் தொழில் முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!