தமிழகம்

மகளிர் தின விழா – 2026

81views
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மகளிர் தின விழா 30.03.2026 அன்று நடைபெற்றது. இளங்கலை இரண்டாமாண்டு தமிழ்த்துறை மாணவி ஜமீரா பானு வரவேற்றார். கல்லூரி ஆட்சிக்குழு செயலர் ஜபருல்லாகான் தலைமையுரையாற்றினார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாகான், கல்வியியல் கல்லூரி முதல்வர் முகம்மது முஸ்தபா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்லூரி தாவரவியல் துறைத்தலைவர் அஸ்மத்து பாத்திமா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், மாவட்ட கல்வி ஆராய்ச்சி நிறுவன, விரிவுரையாளர், உஷா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வினை இளங்கலை மூன்றாமாண்டு இயற்பியல் துறை மாணவிகள் பிரியதர்ஷினி மற்றும் அஞ்சலி ஆகியோர் தொகுத்து வழங்கினர். நிகழ்வில் கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் நசீர் கான், சுயநிதி பாடப்பிரிவு இயக்குனர் சபினுல்லாகான் உள்ளிட்ட பேராசிரியர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர். இறுதியாக முதுகலை இரண்டாமாண்டு தமிழ்த்துறை மாணவி சித்ரா நன்றி கூறினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!