தமிழகம்

பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு பாராட்டு விழா

154views
2025ஆம் ஆண்டுக்கான பால புரஸ்கார் விருது பெற்ற எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் அவர்களுக்கு பாராட்டு விழா 24.3.2026 செவ்வாய் அன்று மாலை 6.00 – 7.30 மணி அளவில் சென்னை கே.கே.நகர், 1,பி.டி.ராஜன் சாலை, மல்டி ஹாலில் நடைபெற்றது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்க மாநில தலைவர் தோழர் டி.எஸ்ஆர், சுபாஷ் தலைமையில் அகில இந்திய பத்திரிகையாளர் சங்க தேசிய குழு உறுப்பினர் தோழர் காயல் அகமது சாகிபு அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக திரைப்பட இயக்குனர் எழுத்தாளர் ராசி அழகப்பன் அவர்கள் பங்கேற்று நூல் குறித்தும் அதன் சிறப்பம்சம் குறித்தும் விரிவாக உரையாற்றினார், பத்திரிகையாளர் உதயம் ராம், பத்திரிகையாளர் பொன் மூர்த்தி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
புத்தக கண்காட்சின் ஒருங்கிணைப்பாளர் ந.ரமேஷ்குமார் நன்றியுரையாற்றினார். முத்தாய்ப்பாக எழுத்தாளர் விஷ்ணுபுரம் சரவணன் இந்நிகழவில் பங்கேற்று தான் கதை எழுதிய பின்புலம் கதாப்பாத்திரம் அமைப்பு குறித்தான காரணம் என சுவாரஸ்மாக உரையாற்றினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!