உலகம்

துபாயில் சர்வதேச பெண்கள் தினத்தையொட்டி இஃப்தார் நிகழ்ச்சி

77views
துபாய் :
சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு துபாய் கிரீன் குளோப் அமைப்பு சார்பில், தமானி ஜூவெல்லர்ஸ் ஒத்துழைப்பில் துபாயில் உள்ள பெண்கள் தொழிலாளர்கள் குடியிருப்பில் இஃப்தார் தொகுப்பு விநியோகிக்கும் நிகழ்ச்சி அதன் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுமார் 500 பெண் தொழிலாளர்களுக்கு பிரியாணி, தண்ணீர், லபான், பேரீத்தம்பழம் மற்றும் பழங்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
இதில் க்ரீன் குளோப் உறுப்பினர்கள் ரசூல், அபூபக்கர், பீர் முஹம்மது, அப்துர் ரஹ்மான் மற்றும் குடும்பத்தினர், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினராக ப்ரீத்தி ஷாஹுல், ஷப்னம், மோனிகா, ரிச்சர்ட், மயூர் மற்றும் தமானி ஜூவெல்லர்ஸ் பணியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!