உலகம்

அமீரகத்திற்கான இந்திய தூதருடன் ஜூம் காணொளி வழியாக அய்மான் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

51views
நாள் :02-03-2026.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த முக்கியமான கால சூழ்நிலையில் இந்திய சமூகத்திற்கு உதவுவதற்காக இந்திய தூதரகத்துடன் இன்று 02-03-2026 காலை 11:00 மணியளவில் நடைபெற்ற Zoom கூட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
மதிப்புக்குரிய அமீரகத்திற்கான இந்திய தூதர் டாக்டர் தீபக் மிட்டால் அவர்கள், ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை அனைத்து இந்தியர்களும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

இந்திய தூதரகம் மற்றும் துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் 24 மணி நேரமும் இந்திய சமூகத்திற்கு உதவ தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
விசிட் விசா விரைவில் காலாவதியாக உள்ளவர்களுக்கு, நிலைமை சீராகும் வரை எந்த கட்டணமும் இன்றி விசாவை நீட்டிக்க வேண்டும் என்று இந்திய அதிகாரிகள் ஐக்கிய அரபு அமீரக அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் இந்தியர்களின் பாதுகாப்பு சம்பந்தமாக பல்வேறு விஷயங்கள் கலந்துரையாடப்பட்டன இறுதியாக, இந்திய சமூகத்தினர் பதற்றப்பட வேண்டாம் என்றும் நாம் பாதுகாப்பான சூழலில் இருக்கிறோம் என்றும் இந்திய தூதர் உறுதியளித்தார்.

ஐக்கிய அரபு அமீரக அரசு, இங்கு வசித்து வரும் இந்திய சமூகத்திற்கு தொடர்ந்து முழு ஆதரவை வழங்கி வருகிறது என்று கூறினார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமூக இந்திய அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!