117views
முழு நாளை முழுதாய் அனுபவிக்க
முதல் துவக்கமாய் காலைப் பொழுது
5 மணி அலாரம் அலறிக் கொண்டிருக்க
ஆழ்மனம் ஆழ்ந்த தியானத்தில் உறங்கிக் கொண்டிருந்தது….
முதல் நாள் வேலை பளு தியானத்தை நீட்டிக் கொண்டிருக்க –
அம்மா எழுந்திருங்க உங்க அலாரம் அடிக்குது என்றாள் மகள்…
கடிகார மணியில் கலையாத ஆழ்நிலை தியானம்…
அம்மா! என்ற அடி நாதத்தில் அலறி கலைந்தது….
வாசலில் தொடங்கி சமையல் அறை வரை
அங்கும் இங்கும் அத்தனை வேலைகள்…
எட்டு மணிக்குள் எல்லாரும் போயாச்சு…
கலைத்துப் போடப்பட்ட அத்தனை
அறைகளும் அடு க்கிக் கொண்டே தானும் தயாராக….
போருக்கு போய் வந்தது போல் உடம்பில் ஓர் அலுப்பு…
கொஞ்சம் வேகத்தில் பின்வாங்க
அலுவலகத்தில் இருந்து ஒரு அலைபேசி அழைப்பு…
மேடம் எப்ப வருவீங்க என்று இதோ கிளம்பிவிட்டேன்…..
இன்னும் அரை
மணி யில் நேரத்தில் அங்கே இருப்பேன் -என்று!
இன்னிசையை காதில் ஒலிக்க விட்டு
என்னை நானே செலுத்திக் கொண்டேன்
என் இருசக்கர வாகனத்தில்….
இந்த அரை மணி நேரம் என்னுடையது என்பது போல்
என்னை நானே புதுப்பித்துக் கொண்டே
வண்டிச்சக்கரத்தின் வேகத்துடன் என் மனமும் உருண்டது…
சாலையோர சாமரங்களின் குளிர் காற்று சொன்னது….
அனலை ஆதவன் அள்ளி வீசினாலும்….
ஆர்ப்பரித்து வான்முகில் கொட்டி தீர்த்தாலும்….
மனிதர்கள் வந்து வெட்டி சாய்த்தாலும்….
பெரும் பேரிடர் ஆரவாரமாய் வந்து போனாலும்…..
அன்பின் ஆழமாய்…. ஆனந்தத்தின் தியானமாய்…
ஒற்றைக்கால் தவங்களாய்….
சாலையோரம் மரங்கள் என்றும் இளைப்பாறும்
இதயங்களுக்கு “நிழலின் நிஜமாய்”
இருந்து கொண்டே தான் இருக்கும்….
இந்த பசுந்தளிர் விரல்கள் சாலைக்கு மேல்
கைகோர்த்து படி……
சவிதா
add a comment






