தமிழகம்

மதுராந்தகம் வரும்பிரதமர் மோடி!! அமோக வரவேற்புக்கான ஏற்பாடுகள்!!

232views
முனைவர் என்.பத்ரி
தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் சூழலில் பிரதமர் மோடி வரும் 23ஆம் தேதி மதுரைக்கு வருகை தருவதாக ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள அம்மா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்ள இருப்பதாகவும் அதில் அ.தி.மு.க., பா.ம.க. உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பிரதமரின் தமிழக வருகைக்கு முன்பே தேசிய ஜனநாயக கூட்டணியை உறுதி செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் திடீரென கூட்டத்தை மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்ற பாஜக முடிவு செய்துள்ளது. இதன்படி சென்னையை அடுத்த செங்கல்பட்டுக்கு அருகே உள்ள மதுராந்தகத்தில் பாஜகவின் கூட்டம் நடைபெற உள்ளது. இதற்கான பூமி பூஜை இன்று நடைபெற்றது. பிரதமர் மோடி பங்கேற்கும் இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் ஏற்றப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!