உலகம்

சீனாவின் சாதனை 700 கி.மீ. வேகத்தில் பாயும் மின்னல் வேக சாதனையின் வெள்ளோட்டம் வெற்றிகரம்

125views
சீனாவின் ராணுவ பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆய்வாளர்கள் பல ஆண்டுகளாக நடத்திய ஆய்வின் விளைவாக மணிக்கு 700 கி.மீ. வேகத்தில் பாய்ந்து செல்லும் ரயிலை வெற்றிகரமாக வெள்ளோட்டம் நடத்தினர்.
மின்காந்தவிசை தொழில்நுட்பத்தில் இந்த ரயில் இயக்கப்படுகிறது. தண்டவாளத்துக்கு சற்று மேலாக, தொடாமல் ராக்கெட் வேகத்தில் பறந்துசெல்லும் இந்த ரயில் சாதாரண கண்களுக்கு ஒரு மின்னல் போல் பார்த்தவுடன் மறைந்துவிடும். இந்த ஆராய்ச்சி குழு கடந்த 10 ஆண்டுகளாக இந்த திட்டத்தில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!