உலகம்

அய்மான் சங்கம் ஆதரவில் அபுதாபியில் மரணித்த கேரளாவை சேர்ந்த சந்தோஷ் உடல் தாயகம் அனுப்பி வைப்பு

180views
அபுதாபியில் மரணித்த கேரளாவை சேர்ந்த சகோதரர் சச்சு சந்தோஷ் (25) அவர்களின் உடல் தாயகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கடந்த 27-11-2025 அன்று அபுதாபியில் மரணித்த கேரளா ஆலப்புழா ஊரை வை சேர்ந்த மறைந்த சகோதரர் சச்சு சந்தோஷ் (25) அவர்கள் அபுதாபியில் மரணித்து விட்டார்கள் அவர் உடலை தாயகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கீழக்கரை சகோதரர் முஹம்மது ராசிக் மற்றும் அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பாக அய்மான் சங்கத்திடம் கோரிக்கை வைத்தார்கள்.
அதன் அடிப்படையில் அய்மான் சங்கத்தின் தலைவர் கீழக்கரை ஹெச் எம் முகம்மது ஜமாலுதீன் அவர்களின் ஆலோசனையின் பேரில் நிர்வாக செயலாளர் ஆடுதுறை முகம்மது அப்துல் காதர் அவர்களின் தலைமையில் தேவையான இந்திய தூதரகத்தின் பணிகள் மற்றும் கார்கோ ஆவணங்களை தயார் செய்து அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டு நாள் 02-12-2025 செவ்வாய்க்கிழமை இரவு மறைந்த சகோதரர் சச்சு சந்தோஷ் (25) அவர்களின் உடல் அபுதாபி விமான நிலையத்திலிருந்து கேரளா கொச்சி விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் 03-12-2025 காலை மறைந்த சகோதரர்களின் உடல் அவர்களின் குடும்பத்தார்கள் பெற்றுக் கொண்டார்கள்.
தொடர்பு விடுமுறையிலும் துரிதமாக சமூகப் பணிகளை செய்து முடித்த அய்மான் சங்கத்தின் நிர்வாகிகளுக்கு அவர் பணிபுரிந்த நிறுவனத்தின் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!