122views
வேண்டும் விடுதலை வேண்டும் விடுதலை
நகர வாழ்க்கையின் கிடுக்கிப் பிடியிலிருந்து
எண்ம வாழ்க்கையின் மாயப் பிடியிலிருந்து
மூச்சை முட்டும் கார்பன் காற்றிலிருந்து
நெருக்கடி கொடுக்கும் பணிச் சுமையிலிருந்து
ஆசை காட்டும் ஆடம்பர வேடத்திலிருந்து
பொய் முகங்களின் போலிச் சிரிப்பிலிருந்து
அனுபவம் தொலைத்த ஏட்டுப் படிப்பிலிருந்து
மனிதம் மறந்த கலவர நெடியிலிருந்து
பணத்தின் பின்னே ஓடும் ஓட்டத்திலிருந்து
கழுத்தை நெரிக்கும் கடன் கயிற்றிலிருந்து
அறிவைத் தொலைத்த மூட நம்பிக்கையிலிருந்து
மூளையை முடமாக்கும் செயற்கை நுண்ணறிவிலிருந்து
வேண்டும் விடுதலை வேண்டும் விடுதலை
வாழ மறந்த இயந்திர வாழ்க்கையிலிருந்து
கவிப்பார்வை
add a comment





