கவிதை

ஃபீனிக்ஸ் பறவைகள்

91views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
முத்தங்களின் பூமி பாலஸ்தீனம்…
ஒருவரை ஒருவர் கட்டித் தழுவவும்
கை கொடுக்கவும் கனிந்த
ஸலாம் உரைக்கவுமான
கண்ணியர்களின் தாய் பூமி
அதை பேயின்
மக்கள் வந்து
சொந்தம் கொண்டாடுகின்றனர்…
அதனால் அது இன்று
ரத்த பூமியானது..
ஓயாமல் வெடிச்சத்தம்
கேட்டுக்கொண்டே இருக்கும்
யுத்த பூமியானது..
பிஞ்சுக் குழந்தைகள்
பெரியோர்கள் பெண்கள் என்று
பேதங்கள் பார்க்காமல்
கொன்று குவித்து
ரத்தம் சுவைக்கும் பேய்களின்
மயானக் காடானது…
நேத்தன் யாகு
ஒரு தாய்க்குப் பிறந்தவன் இல்லை
பல பேய்கள் சேர்ந்து
பெற்றெடுத்துப் போட்ட
பிரேத வாடை ஜடம்…
அவன் சுடுகாட்டு எலும்பு தின்றே
சுகம் கண்டவன்…
சூட்டுக் கோட்டுகளுக்குள்
விரும்புவது எல்லாம்
மனித வேட்டை ரத்தத்தின்
நர மாமிசம்…
வல்லரக்க வாதிகளுக்கு
கூட்டிக் கொடுத்தும்
போட்டுக் கொடுத்தும்
நாட்டைகா கெடுத்தவன்..
இருக்கவும் பிழைக்கவும்
ஒரு நாடு இல்லாமல்
பாலஸ்தீனத்திற்கே வந்து
அந்த மக்களின் சொத்தை
ஆட்டை போட்டவன்..
இன்று அவர்களின் உயிர் எடுத்தே
வேட்டை நடத்துபவன்…
பாலஸ்தீனம்
தியாகிகளின் தேசம்
தியாகங்களின் பூமி…
சுற்றிலும் வீசும்
புனித இறைத் தூதர்களின்
ஜீவித சுவன சுவாசம்
உள்வாங்கி என்றும்
ஜீவித்துக் கொண்டே இருக்கிறது..
துப்பாக்கிகளும் தோட்டாக்களும்
அவர்களிடம் இல்லைதான்…
ஆனால்
தூய்மைகளும் தொழுகைகளும்
உண்டு…
பீரங்கிகளும் ஏவுகணைகளும்
இல்லைதான்…
இறைப்புகழ் துதிகளும்
நபிப்புகழ் ஸலவாத்துகளும்
ஏராளம் உண்டு…
நவீன காலத்தில்தான்
நடக்கிறது யுத்தம்…
பூத்து வந்த புதுப்புது மலர்களை…
மருத்துவமனை நோயாளிகளை..
பெண்களை… பெரியவர்களை..
நிராயுதபாணிகளை
நேத்தன் யாகுவின் ஏவுகணைகள்
கொன்று குவிக்கும் போதெல்லாம்
புதிது புதிதாகப் பிறக்கின்றன
ஆயிரம் ஆயிரம்
புதிய பூக்கள் …
அந்தச் சாம்பலில் பூத்த
ஏராளம் ஏராளம்
பீனிக்ஸ் பறவைகள்…
அவர்கள்
நெருப்பால் சுடுகிறார்கள்
இவர்களோ
மீண்டும் மீண்டும்
பிழைக்கிறார்கள்…
இது
கற்காலம் இல்லைதான்…
ஆனால் இவர்களின்
போராயுதமே கற்கள்தான்…
அவற்றை எரிக்கும் சக்தி
இஸ்ரேலின் எந்த ஏவுகணைக்கும் இல்லை…
இன்றைக்குத் தற்காலிகமாக
இஸ்ரேல் வென்றதாக
போக்குக் காட்டலாம்…
போக்குத்தான் காட்டலாம்…
ஆனால் அவனே
போக்கு என்பதுதான்
உண்மையான வாக்கு…
நாளை இயல்புகள் மாறும்…
இஸ்லாம் வெல்லும்… புனித இல்லம்
பைத்துல் முகத்தஸ்
இறைப்புகழ் மொழிகளோடு
பாலஸ்தீனிகள் கைகளில் வரும்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!