இலக்கியம்

மாதவம் செய்திட வேண்டுமம்மா – நூல் வெளியீட்டு விழா.

201views
ஆகஸ்ட் 24 ஞாயிறு நாலரை – ஆறு ராகுகாலம் என்பதால் அதற்கு முன் நிகழ்ச்சியை தொடங்க வேண்டுமென ஐந்து இல்லத்தரசிகள் மேடைக்கு அழைக்கப்பட்டு குத்துவிளக்கு திரிகள் ஏற்றப்பட.. திருமதி பார்கவி சதீஷ் , “அபீஷ்ட வரத மஹா கணபதி..” னு இறைவணக்க பாடலை கணீர்குரலில் பாட. வரவேற்புரையை திரு.லட்சுமி நாராயணன் வழங்க..நாவலாசிரியை + ஜோதிடரான திருமதி.வேதா கோபாலன் அவர்களது தலைமையில் , கவிஞரும் சிறார் இலக்கிய எழுத்தாளருமான கள்ளிக்கோயில் திரு.ராஜா அவர்கள் நூலை வெளியிட..நூலின் முதல் இரண்டு பிரதிகளை திரு.H.நாகமணி மற்றும் கவிஞர் திருமதி.அன்புச்செல்வி சுப்புராஜ் பெற்றுக் கொள்ள..திருமதி வேதா கோபாலன் நூலின் சிறப்பை பற்றி பேசி நூலாசிரியரை வெகுவாக பாராட்ட..நூலுக்கு அணிந்துரை வழங்கிய மருத்துவர் திரு.ஜெ.பாஸ்கரன் சிறப்பான வாழ்த்துரையை வழங்க..தொடர்ந்து எழுத்தாளர் திருமதி. லதா சரவணன் மற்றும் திரு. தமிழ்செல்வன் ரத்னபாண்டியன் அவர்களும் நூலுக்கு வாழ்த்துரை வழங்க..நிகழ்ச்சிக்கான தொகுப்புரையை மிக சிறப்பாக கவிஞர் திருமதி கவிதா ராஜசேகர் வழங்க..ஏற்புரையாக நூலாசிரியர் முனைவர் திருமதி.சிவகாம சுந்தரி நாகமணி வழங்க..நிகழ்ச்சியை அழகாக வடிவமைத்து திட்டமிட்டு நடக்க உதவிய எழுத்தாளர் திரு.மடிப்பாக்கம் வெங்கட் அவர்களை பாராட்டி குறிப்பிட்டு பேசினார்.
ஆக..நூல்வெளியீடு வருணபகவானின் குறுக்கீடு இல்லாமல் மிக சரியாக மாலை 6.30 க்கு நிறைவடைய..வந்திருந்தவர்கள் சிறப்பான இரவு உணவையும் உண்டபிறகு மன நிறைவுடன் அரங்கத்தைவிட்டு வெளியேறியதை காண முடிந்தது.
-மடிப்பாக்கம் வெங்கட்.

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!