உலகம்

அபுதாபி மவுலித் கமிட்டியின்19 ம் ஆண்டு மஜ்லிஸ் மற்றும் மீலாது பெருவிழா தமிழக மார்க்க அறிஞர் வருகை

135views
அபுதாபி :
அபுதாபியில் உள்ள இந்திய இஸ்லாமிய மையத்தில் 23.08.2025 சனிக்கிழமை முதல் அபுதாபி மவுலித் கமிட்டியின் 19 ம் ஆண்டு மஜ்லிஸ் மற்றும் மீலாது பெருவிழா தொடங்குகிறது.  இந்த விழாவில் இடம்பெறும் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சியில் சிறப்பு பேச்சாளராக சென்னை, கோடம்பாக்கம் புலியூர் ஜும்ஆ மஸ்ஜித் தலைமை இமாம் மவுலவி. எஸ்.எம்.எஸ் முஹம்மது உமர் ரிழ்வானுல்லாஹ் ஜமாலி கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.  மேலும் தமிழ்மாமணி தேரிழந்தூர் தாஜூத்தீன் பங்கேற்று தீனிசைப் பாடல்களை பாட இருக்கிறார்.
இந்த நிகழ்ச்சியானது வருகிற செப்டம்பர் 3 ந் தேதி வரை தினந்தோறும் இரவு 7.30 மணி முதல் 10 மணி வரை நடைபெறும்.  பெண்களுக்கு தனி இட வசதி செய்து தரப்பட்டுள்ளது.  மேலும் அனைவருக்கும் தப்ரூக் உணவும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!