102views
அத்தாவுல்லா
நாகர் கோவில்
உயரங்களைக் கொண்டும்
உருவங்களைக் கொண்டும்
அளக்கப்படுவதல்ல
மானுட நேயம்..
விரித்து வைக்கப்பட்டிருக்கும்
பறவைகளின் சிறகுகள்
பேசும் சமாதானம்
பாவிகள் பார்வைகளில் படுவதில்லை..
அவர்கள் சமாதான தேசங்களிலும்
விமானங்களின்
இறக்கைகள் கொண்டு
அணுகுண்டுகளைத் தூவுகின்றவர்கள்…
காரணம்
அவர்கள்
மனங்கள்
கனத்த ஆயுதங்களால்
செய்யப்பட்டவை…
மெல்லிய இழைகளாலன்று…
உணவற்றவனுக்கன்று
பசித்திருப்பவனுக்கு
ஆனது உணவு….
தகித்திருப்பவனுக்கு ஆனது
நீர் நோயுற்றவனுக்கானது மருந்து…
உண்டு கொழுத்தவன்
நாயோடு செல்லும்
நடைப்பயணம் வேறு
குப்பைத்தொட்டி
இலைகள் கிளறி
நாயுடன் போரிடும்
நசித்த மனிதன் நிலை வேறு..
ஆதரவட்டவர்களுக்காகவே
நிறைத்து வைக்கப்பட்டு
இருக்கின்றன
அரசுகளின் உதவிகளும்
இலவச திட்டங்களும்..
போர்களில் சேதப்படுத்தப்பட்டு
கை கால்கள் இழந்து
வீடிழந்து உறவிழந்து தவிக்கும்
ஆதரவற்றவருக்கான உதவிகள்
சுவனங்களுக்கான
வாசல்களைத் திறக்கட்டும்…
முதலில் அவை
மனிதனுக்கான காய்ந்த வயிறுகளைத்தான் கழுவுகின்றன…
ஒரு முடர் உணவு…
ஒரு முடர் தண்ணீர்…
சகமனிதன் வாழ வாய்ப்பு
அளிக்கும் தருணம்…
வீடிழந்து கூடிழந்து
வெளியில் விரட்டப்பட்ட
பெண்கள் சிறுவர் முதியவர்களுக்கான
ஐநா உதவிகளைக் கூடப்
பெற முடியாமல் மறுதலித்தும்
உயிர் கொன்றும் சிரிக்கும்
இந்த யூத இழிபிறவிகள்
உலகத்தின் கடைக்கோடிக் கழிவுகளின்
கால்நடைக் கழிவுகள்
விடக் கேவலமானவர்கள்…
எல்லாம் இழந்து
சாப்பாடு கேட்கும்
அவர்களின் கூப்பாடு
இஸ்ரேலின் போர்ப்பாட்டில்
தற்போது அடங்கிவிடலாம்….
நாளை இறைவன் ஏற்பாட்டில்
இஸ்ரேல் இந்த கூப்பாட்டுக்கு
ஆளாகவும் நேரலாம்…
ஏனெனில் காலம்
வித்தியாசமான ஆயுதம்…
(பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்பட்ட ஐநா சபை உணவைப் பெறுகின்ற நேரத்திலும் சுட்டுக்கொன்ற இஸ்லேலியக் கொடூரமனத்தவர் பற்றிய கவிதை இது)
add a comment






