தமிழகம்

குடியாத்தத்தில் புகழ் மிக்க கெங்கையம்மன் திருவிழா முன்னிட்டு சிரசு ஊர்வலம் ! பக்தர்கள் பரவசம் !!

68views
வேலூர் மண்டலத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் சிறப்புமிக்க திருவிழா கெங்கை அம்மன் திருவிழா ஆண்டுக்கு ஒரு கொண்டாடப்படுகிறது. அதன் படி ஒரு வாரக் காலம் திருவிழாக் துவங்கியது.நேற்று தேர்திருவிழா நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான சிரசு ஊர்வலம் 15-ம் தேதி வியாழக்கிழமை விடியற்காலை துவங்கியது. கெங்கை அம்மனின் மாமியார் வீடாக கருதப்படும் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலிருந்து தாய்வீடாக கோபாலபுரம் கெங்கை அம்மன் ஊர்வலமாக வருவதே இதன் சிவப்பு. வழிநெடுகிலும் சிரசுக்கு மாலை அணிவித்து வழிப்பட்டனர். சிரசு பொருத்தப்பட்டு அம்மனுக்கு விசேஷ பூஜை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிப்பட்டன. இந்த திருவிழா முன்னிட்டு இன்று 15-ம் தேதி வியாழக்கிழமை வேலூர் மாவட்டத்திற்கு அரசு விடுமுறை அளிக்கப்பட்டது.
செய்தியாளர்: வேலூர் கே.எம்.வாரியார்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!