கவிதை

மானுட மகத்துவம்

19views
அத்தாவுல்லா
நாகர்கோவில்
இது விழுந்து கிடப்பவர்களை
எழுந்து நடக்கச்செய்யும்
இனிய எழுச்சி…
அரசாங்கப் பணிகளுக்கு
ஆலாய்ப் பறப்பவர்கள்
மனங்களில்
மகிழ்ச்சிகளைப்
பெருக்கும்
மகரந்த மலர்ச்சி…
இயற்கையில்
நடை தளர்ந்தவர்களுக்கு
பெரியாரின் கைத்தடிக் கொடுத்து
ஊன்றி நடக்கச் செய்யும்
உற்சாக நெகிழ்ச்சி…
இரக்கமுள்ளவர் கூட
என்ன செய்வது
என்று கடந்து போகிற சூழ்நிலையில்
அவர்களை
அரசு ஆசனத்தில் அமர்த்தி
அழகு பார்க்கும்
ஆனந்த அற்புதம்…
முறிந்து விழுந்த மரக்கிளைகளை
ஒட்டி வைக்கும்
விஞ்ஞான வித்தை…
தளர்ந்து போனவர்களை
எழுப்பி விடுகிற
தளராத ஊக்கம் …
முடியாதவர் தலையிலும்
அரச முடிசூட்டும்
அழகிய வைபவம்….
காக்கை குருவி
எங்கள் ஜாதி என்றான் பாரதி…
நீங்களோ
கலைஞர் வழியில்
தமிழ்த் தேரோட்டும் சாரதி…
எங்கள் முதல்வரே…!
பல்கலைக்கழக வேந்தரே… !
உடல் ஊனமுற்றவருக்கு
மாற்றுத்திறனாளி என்ற
மாண்புச் சொல்
வழங்கினார் கலைஞர்…
நீங்களோ
அவர்களை ஆற்றுப்படுத்தி
அரசு பதவி வழங்கி கௌரவிக்கிறீர்கள்…
இது மானுடம் புதுக்கும் பேரறம்…
மனங்களைச் செதுக்கும் மகத்துவம்…
முள் காட்டிலும்
முல்லை வளரச்செய்யும்
இயற்கை மருத்துவம்…
தமிழகத்திற்கு மட்டுமல்ல
இந்தியத்துக்கே
இது ஓர் முன் உதாரணம்…

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!