உலகம்

அபுதாபியில், திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

291views
கடந்த 22-03-2025, சனிக்கிழமை மாலை அமீரகத் தலைநகர் அபுதாபியில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர்களின் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி அபுதாபி ஏர்போர்ட் ரோட்டில் உள்ள கிரேண்ட் நல்லாஸ் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அபுதாபி மற்றும் அல் அய்ன்
பகுதியில் வசிக்கும் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் துவக்கமாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைத்து முன்னாள் மாணவர்களும் ஒருவரையொருவர் தங்களுக்குள் அறிமுகம் செய்து கொண்டனர். தொடர்ந்து இஃப்தார் (நோன்பு துறப்பு) நடந்தது. மஃரிப் தொழுகைக்கு பிறகு நிகழ்ச்சியின் தொடக்கமாக திருவாவடுதுறை ஜுபைர் அவர்கள் கிராஅத் ஓதினார்கள். அமைப்பின் தலைவர் A.S.முஹம்மது அன்சாரி தலைமை தாங்கினார்கள். அமைப்பின் பொதுச் செயலாளர் மதுக்கூர் ஜஉபர் ஸாதிக் அனைவரையும் வரவேற்று பேசினார்கள்.  அமைப்பின் துணைத் தலைவர் பாபநாசம் யஹ்யா அவர்கள் அமைப்பின் செயல்பாடுகள் குறித்து பேசினார்கள்.
தொடர்ச்சியாக பேசிய அமைப்பின் தலைவர் A.S.முஹம்மது அன்சாரி அவர்கள் அமைப்பின் எதிர்கால திட்டங்களையும் கடந்த கால நினைவுகள், அனுபவங்களையும் விபரித்தார்கள். தொடர்ந்து கலந்து கொண்டவர்களிடமிருந்து வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டு பயிற்சிகள் குறித்து ஆலோசனைகள் பெறப்பட்டது. இந்த நிகழ்வில் ஐம்பதுக்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள், அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் உள்ளிட்ட பல அமைப்பினர்களும் திரளாக கலந்து கொண்டனர்.  நிகழ்ச்சி நிரல்களை அமைப்பின் பொதுச் செயலாளர் மதுக்கூர் ஜஉபர் ஸாதிக் நெறிபடுத்தினார்கள், நிறைவாக சென்னை மீரான் பைஜி துவாவுடன் அனைவரும் இரவு உணவு அருந்திவிட்டு, பசுமையான கல்லூரி நினைவுகளோடு கலைந்து சென்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.
<p>Right Click & View Source is disabled.</p>
error: Content is protected !!