உலகம்

தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சார பேரவை, குவைத். ஏற்பாடு செய்திருந்த 19 ஆம் ஆண்டு மாபெரும் இஃப்தார் நிகழ்வு

27views
கடந்த 14 மார்ச் 2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை டீச்சர் சொசைட்டி, தஸ்மாவில் சிறப்பாக நடந்து முடிந்தது. நிகழ்ச்சியின் துவக்கமாக பேரவையின் பொருளாளர் அப்துல் கரீம் அவர்கள் இறைமறை வசனம் ஓதி நிகழ்வினை துவக்கி வைத்தார்கள். பேரவையின் பொதுச் செயலாளர் சிராஜுதீன் அவர்கள் இந்நிகழ்வை தொகுத்து வழங்கினார்கள். தொடர்ந்து பேரவையின் துணைப் பொதுச் செயலாளர் முபாரக் அலி அவர்கள் வரவேற்புரை நிகழ்த்த, பேரவையின் துணைத் தலைவர் ஹசன் முகமது அவர்கள் தலைமை உரை ஆற்றினார்கள். அதனைத் தொடர்ந்து தாயகத்திலிருந்து சிறப்பு விருந்தினராக குவைத் வருகை தந்திருந்த சமூக ஆசிரியை, பெண்கள் பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர், சகோதரி பாத்திமா சபரிமாலா, M.A, M.Phil, அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக பேரவையின் செயற்குழு உறுப்பினர் அப்துல் ஹலீம் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்கள். தொடர்ந்து இஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு உணவு விநியோகிக்கப்பட்டது, அனைவரும் நோன்பு திறந்து விட்டு சென்றார்கள்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!