உலகம்

அபுதாபி மதுக்கூர் வெல்ஃபேர் அஸோஷியேஸன் ஒன்று கூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி

116views
அபுதாபியில் வாழ் மதுக்கூர் மக்களின் ஒன்றுகூடல் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி 12-03-2025, புதன் கிழமை ஏர்போர்ட் ரோட்டில் அமைந்துள்ள ஜப்பார்பாய் பிரியாணி உணவகத்தில் சீரும், சிறப்புமாக நடைபெற்றது.
கடந்த ஆண்டு (2024) இதே ரமளான் மாதத்தில் மதுக்கூர் வெல்ஃபேர் அஸோஷியேஸன் என்ற அமைப்பு இறையருளால் ஏற்படுத்தப்பட்டது.
ஓன்று கூடலின் துவக்கமாக மதுக்கூர் ஜஉபர் ஸாதிக் அவர்கள் அனைவரையும் வரவேற்று, அமைப்பின் நோக்கம் பற்றி பேசினார்கள். PTEA ஃபாருக் அவர்கள் கடந்த வருடம் அமைப்பின் சார்பாக எடுக்கப்பட்ட முயற்சிகளை பற்றி பேசினார்கள்.  M. I. அனஸ் அவர்கள் ஒரு வருடத்தின் நிதி நிலை அறிக்கை பற்றி விபரித்தார்கள். மதுக்கூர் M.அப்துல்லாஹ் அவர்கள் அமைப்பின் கல்வி சார்ந்த எதிர்காலத் திட்டங்களை எடுத்துரைத்தார்கள்.
பின் கலந்து கொண்ட அனைவரிடமிருந்தும் அமைப்பின் கல்வி செயல் திட்டத்திற்கான ஆலோசனைகள் பெறப்பட்டது. எதிர்காலங்களில் மருத்துவ தேவை மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்வது என்றும் ஏக மனதாக தீர்மானிக்கப் பட்டது.
நிறைவாக இஃப்தார் மற்றும் இரவு உணவோடு நிகழ்வு நிறைவு பெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அமைப்பின் நிறுவன நிர்வாகிகளான M.அப்துல்லாஹ், மதுக்கூர் ஜஉபர் ஸாதிக், PTEA ஃபாருக் மற்றும் M. I. அனஸ் ஆகியோர் செய்திருந்தனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!